மகாராஷ்டிராவை புரட்டிப் போட்ட நிசர்கா புயல்!

மும்பை (03 ஜூன் 2020): மகாராஷ்டிராவை புரட்டிப் போட்ட நிசர்கா புயல் இன்று பிற்பகல் மகாராஷ்டிராவில் கரையைக் கடந்தது. அரபிக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் பட்சத்தில் நிசர்கா (NISARGA) என்று பெயரிடப்பட்டது. இது இன்று பிற்பகல் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் மகாராஷ்டிராவில் ரையக் கடந்தது. புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு…

மேலும்...

நிசார்கா புயல் எச்சரிக்கை – 115 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்!

மும்பை (02 ஜூன் 2020): தென் மேற்கு அரபிக்கடலில் உருவாக்கியுள்ள நிசார்கா புயல் நாளை மகாராஷ்டிரா மற்றும் குஜாராத் இடையே கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிசார்கா புயல் கோவாவுக்கு 280 கி.மீ தொலைவிலும், மும்பைக்கு தென்மேற்கே 490 கி.மீ தொலைவிலும், குஜராத்தில் இருந்து 710 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது நாளை பிற்பகல் மகாராஷ்டிராவின் ஹரிஹரேஸ்வர்- டாமன் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிசார்கா புயல் காரணமாக,…

மேலும்...

ஒரே நாளில் 103 பேர் பலி – கொரோனாவால் திக்குமுக்காடும் மகாராஷ்டிரா!

மும்பை (02 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகராஷ்டிரா. அங்கு இன்று ஒரே நாளில் மட்டும் 103 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,600-ஐ கடந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு…

மேலும்...

அமைச்சர் உட்பட ஒரேநாளில் 778 பேருக்‍கு கொரோனா பாதிப்பு!

மும்பை (24 ஏப் 2020): மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்‍கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக அம்மாநிலத் தலைநகர் மும்பையின் நிலை மோசமாகி வருகிறது. மஹாராஷ்ட்ராவின் மொத்த கொரோனா நோயாளிகளில் பாதிக்கும் அதிகமானோர் மும்பையில் உள்ளனர். அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 427…

மேலும்...

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி – இரண்டு சாமியார்கள் உட்பட மூன்றுபேர் அடித்துக் கொலை!

மும்பை (20 ஏப் 2020): மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் கிராமத்தில் இரண்டு சாமியார்கள் மற்றும் கார் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கன்டிவாலி பகுதியை சேர்ந்த இரண்டு சாமியார்கள் கடந்த வியாழக்கிழமை ஒரு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குஜராத் மாநிலம் சூரத்திற்கு வாடகை காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில், மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் பலர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக வதந்தி பரவி…

மேலும்...

மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு!

மும்பை (28 பிப் 2020): மகாராஷ்டிராவில் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் நவாப் மாலிக் தெரிவிக்கையில், “தற்போதைய சட்டசபை கூட்டத்தொடர் முடிவதற்குள், மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்னர் இது தொடர்பான உரிய நடவடிக்கைகள்…

மேலும்...

இந்துக்கள் மட்டுமே நிறைந்த கிராமத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம்!

மும்பை (10 பிப் 2020): முழுக்க முழுக்க இந்துக்கள் மட்டுமே நிறைந்த கிராமம் ஒன்றில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் அருகே அமைந்துள்ள இஸ்லாக் கிராமத்தில்தான் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் 2000 ஆயிரம் பேர் உள்ள இந்த கிராமத்தில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்த கிராமத்தில். கடந்த ஜனவரி 26-ம் தேதி இஸ்லாக் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு…

மேலும்...

தவறி விழுந்த ரயில் பயணியைக் காப்பாற்றிய அசத்தல் டிரைவர் -VIDEO

மும்பை (07 பிப் 2020): ரெயிலிலிருந்து தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய ரெயில் டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் பர்தண்டே- மாஹேஜி இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரயிலில் இருந்து ராகுல் பட்டீல் என்ற பயணி தவறி விழுந்தார். அவரது நண்பர்கள் உடனே அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி, ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது ரெயில் சுமார் 1 கி.மீ தூரம் சென்றிருந்தது. எனினும் ரயிலை ரிவர்ஸாக இயக்கி, படுகாயங்களுடன் கிடந்த பயணி ராகுல்…

மேலும்...

பேருந்து ஆட்டோ மோதி விபத்து: 26 பேர் பலி!

மும்பை (29 ஜன 2020): மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டம் மாலேகான்-தியோலா சாலையில், மேஷி பாட்டா என்ற இடத்தில் நாசிக் நகரில் உள்ள கல்வான் நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும் சாலையோரமாக இருந்த கிணற்றில் விழுந்தன. தகவலறிந்து அங்கு சென்ற…

மேலும்...

பாஜக மீது விசாரணை – உத்தவ் தாக்கரே உத்தரவு!

மும்பை (24 ஜன 2020): முந்தைய பாஜக ஆட்சியில் பல தலைவர்களின் போன் பேச்சுக்கள் ஓட்டுக் கேட்கப் பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். முந்தைய பாஜக ஆட்சியில் நான் உட்பட பல தலைவர்களின் போன் பேச்சுக்கள் ஓட்டுக் கேட்கப் பட்ட டுள்ளது என்று , சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் தெரிவித்தார். இது மகாராஷ்டிர அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “மஹாராஷ்டிராவில், கடந்த,…

மேலும்...