மீடியா ஒன் தொலைக்காட்சி மீதான தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (16 மார்ச் 2022): பிரபல மலையாள தொலைக்காட்சி சேனலான மீடியா ஒன் மீதான ஒன்றிய அரசின் தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீடியா ஒன் தொலைக்காட்சி கடந்த ஜனவரி மாதம் ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அத்தொலைக்காட்சி நிறுவனம் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் கேரள நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான…

மேலும்...

மீடியா ஒன் தொலைக்காட்சி மீதான தடைக்கு எதிராக மக்களவையில் எதிர் கட்சிகள் தீர்மானம்

மும்பை (02 பிப் 2022): கோவிட் தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் தனது மகள் இறந்ததற்கு 1,000 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி மகாராஷ்டிரா உயர் நீதிமன்றத்தில் தந்தை ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். அவுரங்காபாத்தைச் சேர்ந்த திலீப் லுனாவத் என்பவர் மகாராஷ்டிரா அரசு மற்றும் சிரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவிடம் இழப்பீடு கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். மனுதாரர் திலீப் லுனாவத், நாசிக்கில் பயின்று வந்த மருத்துவ மாணவியான தனது மகள் சினேகல் இரண்டு தவணை தடுப்பூசியை…

மேலும்...

பிரபல மலையாள செய்தி சேனல் மீடியா ஒன்னுக்கு மத்திய அரசு தடை!

திருவனந்தபுரம் (01 பிப் 2022): பிரபல மலையாள தொலைக்காட்சி சேனல் மீடியாஒன் டிவி ஒளிபரப்புக்கு, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. மீடியா ஒன் சேனலுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்ததை அடுத்து, சேனலின் உரிமத்தை புதுப்பிப்பதற்கான அனுமதியை அமைச்சகம் மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தடையை நீக்க சட்டப்பூர்வ செயல்பாடுகளை தொடங்கியுள்ளதாகவும், தற்போது ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீடியாஒன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக மீடியாஒன் டிவி செப்டம்பர் 30, 2021 முதல் செப்டம்பர்…

மேலும்...

கடும் எதிர்ப்பை அடுத்து ஏசியாநெட் நியூஸ், மீடியா ஒன் சேனல்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

புதுடெல்லி (07 மார்ச் 2020): மீடியா ஒன் மற்றும் ஆசியா நெட் நியூஸ் சேனல்களுக்கு விதிக்கப்பட்டத் தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி கலவரத்தை தவறாக சித்தரித்ததாக தகவல் ஒளிபரப்புத்துறை இரண்டு சேனல்களுக்கும் 48 மணி நேர தடை விதித்திருந்தது. இந்நிலையில் இரு சேனல்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த தடைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சென்னை பத்திரிகையாளர்கள் மன்றமும், ‘கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் நேரடித் தாக்குதல்’ என்று கண்டனம் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து இரு சேனல்களுக்கும் விதிக்கப்பட்டிருந்தத்…

மேலும்...

இந்தியாவில் இரண்டு செய்தி சேனல்களுக்குத் தடை!

புதுடெல்லி (06 மார்ச் 2020): டெல்லி கலவர செய்தியை தவறாக ஒளிபரப்பியதாக மலையாள மொழியின் இரண்டு சேனல்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மலையாளத்தில் பிரபலமான செய்தி சேனல்கள் ஆசியாநெட் மற்றும் மீடியா ஒன். இவை இரண்டு சேனல்களிலும், ஒளிபரப்பான செய்தி அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள தவறான செய்திகள் எனப் பட்டியலிட்டுள்ள அமைச்சகம், இதுபற்றிய விளக்கங்களுடன், ஒளிபரப்புக்கு இரு நாள்கள் – வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி…

மேலும்...