நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு காரணம் மோடிதான் – உதயநிதி ஸ்டாலின்!

சென்னை (27 ஜன 2020): நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற மோடியும் டாடியும் என்று தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஆவடியில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி, ” நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., பெரிய அளவில் வெற்றி பெற என் பிரசாரம் பெரிய அளவில் உதவியது. ஆனால் அது என்னுடைய வெற்றி இல்லை. அதற்கு காரணம் இருவர்….

மேலும்...

குடியரசு தினம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடி ஏற்றினார்!

புதுடெல்லி (26 ஜன 2020): குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். நாட்டின் 71வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி ராஜபாதையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றினார். பிரேசில் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோ இந்த விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். போா் உள்ளிட்டவற்றில் உயிரிழந்த வீரா்களுக்கு இந்தியா கேட் பகுதிக்கு அருகிலுள்ள…

மேலும்...

மோடி அமித்ஷாவுக்கு எதிராக காய் நகர்த்தும் ராஜ்நாத் சிங்!

மீரட் (23 ஜன 2020): இந்திய முஸ்லிம்கள் மீது யாரும் கை வைக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மீரட்டில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிரிவினையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது யாராக இருந்தாலும் சரியே என்றார். மேலும் குடியுரிமை சட்டம் எதிர்கட்சிகளால் சிறுபான்மையினருக்கு எதிரானதுபோல் திசை திருப்பப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். அமித் ஷா, யோகி…

மேலும்...

சவாலை ஏற்க தயார் – மோடி அமித் ஷாவுக்கு கபில் சிபல் அறைகூவல்!

புதுடெல்லி (21 ஜன 2020): குடியுரிமை சட்டம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கு கபில் சிபல் அழைப்பு விடுத்துள்ளார். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினரின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும்…

மேலும்...

மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

புதுடெல்லி (20 ஜன 2020): கடின உழைப்பே வெற்றிக்கான வழி என்று மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்‍கப்படுத்தும் நிகழ்ச்சி, டெல்லி Talkatora மைதானத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் திரு. மோதி, மாணவர்கள், தேர்வை அச்சமின்றி எழுதவும், பதற்றமின்றி அணுகவும் அறிவுரை வழங்கினார். அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சூழல்களை அனைவருமே சந்திப்போம் என்றுக்‍ கூறிய பிரதமர், அதனை எப்படி எதிர்‍கொள்ள வேண்டும் என்பதற்கு, 2001-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா,…

மேலும்...

நடிகை குணமடைய மோடி பிரார்த்தனை!

புதுடெல்லி (19 ஜன 2020): கார் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நடிகை சபானா ஆஸ்மி குணமடைய பிரதமர் மோடி பிரர்த்திப்பதாக தெரிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை ஷபனா ஆஸ்மியின் கார் லாரி மீது மோதியது. அதன் பின்னர் லாரி டிரைவர் மற்றும் ஷபானா ஆஸ்மியின் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்தநிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை சபானா ஆஸ்மி விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தனது…

மேலும்...

மோடி – அமித் ஷா இடையே கருத்து வேறுபாடு – பகீர் தகவல்!

புதுடெல்லி (19 ஜன 2020): குடியுரிமை சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். ராய்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிஏஏ, என்பிஆர், என்சிஆர் உள்ளிட்ட அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்று சொல்கிறார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, என்சிஆர் நாட்டில் நடைமுறைபடுத்தப்படாது என்கிறார். இங்கு யார் உண்மையைச் சொல்கிறார். யார் பொய் சொல்கிறார்….

மேலும்...

மோடியின் குடியுரிமை ஆவணங்கள் எங்கே? – தகவல் அறியும் சட்டத்தில் கேள்வி!

திருச்சூர் (18 ஜன 2020): பிரதமர் மோடியின் குடியுரிமை ஆவணங்களை காட்ட வேண்டி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விளக்கம் கேட்கபப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மாணவர்கள் இப்போராட்டத்தில் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில் இந்நிலையில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ் கல்லு என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு அளித்துள்ளார். இதில் பிரதமர் மோடி இந்திய குடியுரிமை பெற்றவரா? அப்படி பெற்றிருந்தால் அதற்கான ஆதாரங்களை…

மேலும்...

பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் யோசனை!

சென்னை (15 ஜன 2020): பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் யோசனை வழங்கியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், ட்விட்டரில் சிஏஏ தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அவர், “பிரதமர் மோடி, சிஏஏ குடியுரிமை வழங்குவதற்குத்தான், குடியுரிமையைப் பறிப்பதற்கு அல்ல என்கிறார். எங்களில் பலபேர், சிஏஏ பல மக்களின் குடியுரிமையை எடுத்துவிடும் என எண்ணுகிறோம். மோடி உயர்வான இடங்களில் இருந்துகொண்டு அமைதியான, கேள்வி கேட்க முடியாத மக்களிடம் பேசுகிறார். நாங்கள் ஊடகத்தின் வழி பேசுகிறோம்….

மேலும்...

உயிருடன் புதைத்துவிடுவேன் – பாஜக பிரமுகர் மிரட்டல் பேச்சு!

அலிகார் (14 ஜன 2020): பிரதமர் மோடி குறித்து பேசுபவர்களை உயிருடன் புதைத்துவிடுவேன் என்று பாஜக பிரமுகர் வெறித்தனமாக பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பா.ஜனதா பிரமுகர் ரகுராஜ் சிங் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார். பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷமிடுபவர்களை உயிருடன் புதைத்து விடுவேன். இருவரும் உங்கள்…

மேலும்...