குஜராத் இனப்படுகொலை குறித்த பிபிசி ஆவணப்படம் இரண்டாம்பாகம் இன்று வெளியாகிறது!

புதுடெல்லி (24 ஜன 2023): குஜராத் இனப்படுகொலை குறித்த பிபிசி ஆவணப் படத்தின் இரண்டாம் பாகம் இன்று ஒளிபரப்பாகிறது. ‘இந்தியா: மோடி கேள்வி’ என்ற பெயரில் பிபிசியின் ஆவணப்படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியானது. வெளியான நாளில் இருந்து, இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளில் பெரும் விவாதங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் வழிவகுத்துள்ள நிலையில், இரண்டாம் பாகத்தை பிபிசி இன்று ஒளிபரப்புகிறது. குஜராத் இனப்படுகொலை தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் என பிபிசி அறிவித்துள்ளது. பிபிசியின் இந்த…

மேலும்...

உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரதமர் மோடிக்கு எதிரான பிபிசியின் ஆவணப்படம்!

லண்டன் (20 ஜன 2023): குஜராத் இனப்படுகொலை தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவண படம் உலக அளவில் விவாத பொருளாகியுள்ளது. கடந்த 17 ஆம் தேதி பிபிசி குஜராத் இனப்படுகொலை தொடர்பாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. “இந்தியா- மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தில் பிரதமர் மோடி குறித்து எதிர்மறையான கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. பிபிசி ஆவண படம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட எம்.பி.இம்ரான் ஹூசைன் நேற்று பிரச்சினை எழுப்பினார். அப்போது…

மேலும்...

அடுத்த பிரதமர் யார்? – அமித்ஷா பதில்!

புதுடெல்லி (18 ஜன 2023): பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலைமையும், நட்டாவின் அமைப்புத் திறமையும் பாஜகவை மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு கொண்டு வரும் என்று அமித் ஷா கூறினார். 2023ல் ஒன்பது மாநிலங்களில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலையும், அடுத்த லோக்சபா தேர்தலையும் நட்டா தலைமையில் பா.ஜ., சந்திக்கும்.நட்டா தலைமையில் பாஜக மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக அமித்ஷா கூறினார். குஜராத்தில்…

மேலும்...

குஜராத் மாடலை தமிழ்நாட்டில் பின்பற்ற திமுக எம்.எல்.ஏ பரிந்துரை!

சென்னை (16 ஜன 2023): “குஜராத் சட்டசபை போல தமிழக சட்டசபையில் தமிழ்நாட்டின் வரைபடத்தை வைக்கலாம்!” என மைலாப்பூர் திமுக எம்.எல்.ஏ வேலு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “குஜராத் சட்டமன்றத்தின் முகப்பில் குஜராத் மாநிலத்தில் வரைபடம் பொறிக்கப் பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தமிழ்நாட்டின் வரைபடத்தை வைக்கலாமே? குஜராத் மாடலை சில விஷயங்களில் பின்பற்றலாம். பாஜகவினர் தவறு என சொல்வார்களா என்ன?” என பதிவிட்டுள்ளார். “குஜராத் மாடல்” என்ற சொல்லை வைத்தே பிரதமர்…

மேலும்...

விஐபி ஹஜ் ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு!

புதுடெல்லி (14 ஜன 2023): உயர்மட்ட அரசியலமைப்பு பதவிகள் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சகம் ஆகியவற்றில் உள்ளவர்களுக்கு இருக்கும் விஐபி ஹஜ் ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஹஜ்ஜில் விஐபி ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவரவும், விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பிரதமர் மோடி பதவியேற்ற முதல் நாளிலேயே தீர்மானத்தை முன்வைத்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது ஹஜ் தொடர்பாக விஐபி…

மேலும்...

பிரதமர் மோடியின் தாய் காலமானார்!

அகமதாபாத் (30 டிச 2022): பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் மோடி காலமானார் உடல் நலக்குறைவால் குஜராத் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹீராபென் மோடி இன்று (30 டிச 2022) வெள்ளிக்கிழமை காலமானார். இந்த தகவலை பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும்...

சிறுபான்மை மாணவர்களுக்கு உதவ வேண்டும் – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

சென்னை (08 டிச 2022): சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதளல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு மீண்டும் உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வழங்கப்பட்ட கல்வித் தொகை நிறுத்தப்பட்டதால் ஐந்தரை லட்சம் சிறுபான்மை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்...

பிரதமர் தமிழக வருகையில் பாதுகாப்பு குறைபாடு – அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்!

சென்னை (01 டிச 2022): பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் சுற்றுப்பயணம் வந்தார். அப்போது, அவரது பாதுகாப்பில் குளறுபடிகள் நடந்ததாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி கொடுத்தார். மேலும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக கவர்னரை சந்தித்தும் மனு கொடுத்துள்ளதாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார். இந்நிலையில் இதுகுறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று அளித்த பேட்டி ஒன்றில், அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது…

மேலும்...

71000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை – பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்!

புதுடெல்லி (22 நவ 2022): நாட்டின் 71,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்குகிறார். இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்த வேலைவாய்ப்பு கண்காட்சி. காலை 10.30 மணிக்கு பிரதமர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். புதிதாக பணியில் சேர்ந்துள்ளவர்கள் குறித்தும் அவர் பேசுவார். ஆர்வமுள்ளவர்களுக்கான ஆன்லைன் பயிற்சித் திட்டமான கர்மயோகி பிரரம்த் திட்டத்தையும் பிரதமர்…

மேலும்...

ஒரே நாடு ஒரே சீருடை – பிரதமர் மோடி பரிந்துரை!

புதுடெல்லி (28 அக் 2022): நாடு முழுவதும் காவல்துறையினருக்கு “ஒரே நாடு, ஒரே சீருடை” என்ற யோசனையை பிரதமர் மோடி முன்வைத்தார், இது ஒரு பரிந்துரை மட்டுமே என்றும் அதை மாநிலங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை என்றும் அவர் கூறினார். மாநில உள்துறை அமைச்சர்களின் “சிந்தன் ஷிவிர்” நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை சமாளிக்க மாநிலங்களுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் “ஒரே தேசம், காவல்துறைக்கான…

மேலும்...