பெண்கள் மீதான மரியாதை இதுதானா? – மோடி மீது மல்லிகார்ஜுன் கார்கே கடும் விமர்சனம்!

புதுடெல்லி (21 அக் 2022): பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்ததை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கே இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், “பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்ததை பாஜக கேபினட் அமைச்சர் நியாயப்படுத்துகிறார், மற்றொரு கற்பழிப்பு குற்றவாளியின் நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். பெண்களுக்கு மரியாதை என்று பிரதமர் போதித்தது இதுதானா?’ என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்….

மேலும்...

சிறுபான்மையினர் நலத்துறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு!

புதுடெல்லி (03 அக் 2022): சிறுபான்மையினர் நலத்துறையை மத்திய அரசு ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2006ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட சிறுபான்மையினர் நலத்துறையை 16 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறுபான்மை விவகாரங்கள் துறை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்துடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோடி அரசில் ஒரே முஸ்லீம் முகமான…

மேலும்...

பணமதிப்பிழப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

புதுடெல்லி (27 செப் 2022): பணமதிப்பிழப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும். இந்த மனுக்களை விரிவாக விசாரிக்கும் தேதியை நீதிமன்றம் நாளை அறிவிக்கவுள்ளது. டிசம்பர் 16, 2016 அன்று, இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டது, ஆனால் பெஞ்ச் இன்னும் அமைக்கப்படாததால் அது விசாரிக்கப்படாமல் இருந்தது. நவம்பர் 8, 2016 அன்று பிரதமர் நரேந்திர…

மேலும்...

மோடிதமிழகம் வருகை – போலி செய்திகளை வெளியிட்ட மீடியாக்கள்?

சென்னை (27 ஜூலை 2022): பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவுள்ள நிலையில் மோடிக்கு எதிராக சமூக வலைதலங்களில் பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கபடும் என்று காவல்துறை அதிகாரி கூறியதாக முன்னணி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த செய்திகள் முற்றிலும் தவறானது என திமுக தரப்பினர் விளக்கம் அளித்து வருகின்றனர். சென்னை மகாபலிபுரத்தில் ஜூலை 28 ஆம் தேதி, செஸ் ஒலிம்பியட் போட்டி நடைபெறவுள்ளது. இதன் தொடக்கவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர்…

மேலும்...

குடியரசுத் தலைவரை அவமதித்த மோடி – வீடியோ இணையத்தில் வைரல்!

புதுடெல்லி (24 ஜூலை 2022): குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அவமதிக்கும் விதமாக பிரதமர் மோடி நடந்துகொண்ட விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இதற்கான பிரிவு உபசார நிகழ்வின் பொழுது மோடிக்கு, ராம்நாத் கனிவான வணக்கம் தெரிவித்தார்.     ஆனால் அதனை சட்டை செய்யாத பிரதமர் மோடி கேமராவை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும்...

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எம்பி பதவி – பிரதமர் மோடி அறிவிப்பு!

புதுடெல்லி (06 ஜூலை 2022): இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இளையராஜாவின் படைப்பு மேன்மை தலைமுறைகளைக் கடந்து மக்களை மகிழ்வித்திருக்கிறது எனவும் மோடி தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடியை டாக்டர் அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் கைது!

காந்திநகர் (26 ஜூன் 2022): குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமுக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டை குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று முன் தினம் தள்ளுபடியான நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர்…

மேலும்...

மோடியிடம் ஆதரவு கேட்ட யஷ்வந்த் சின்கா!

புதுடெல்லி (25 ஜூன் 2022): ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா பிரதமர் மோடியிடம் ஆதரவு கோரியுள்ளார். யஷ்வந்த் சின்கா பல கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணிகளை தொடங்கி விட்டார். அந்தவகையில் பிரதமர் மோடியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது ஆதரவை கேட்டுக்கொண்டார். அத்துடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவரும், தனது வழிகாட்டியுமான எல்.கே.அத்வானி ஆகியோரிடமும் தன்னை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும்…

மேலும்...

பாஜகவைக் கை கழுவும் எடப்பாடி – அதிர்ச்சியில் பாஜக!

சென்னை (24 ஜூன் 2022) : அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராகுல் காந்தியுடன் எடப்பாடி ரகசியமாக பேசியுள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதனை இரு தரப்பினரும் இன்னும் உறுதிபடுத்தவில்லை. மேலும் அ.தி.மு.க. தொண்டர்களின் ஒற்றை தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் நிறைவேற்ற முடியாமல் போனதை, தனக்கு ஏற்பட்ட தோல்வியாக எடப்பாடி கருதுகிறார். ஓபிஎஸ்-ஐயே பாஜக விரும்புகிறது…

மேலும்...

வெறுப்பு அரசியல் – மன்மோகன் சிங் உள்ளிட்ட 108 முக்கிய பிரமுகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்!

புதுடெல்லி (26 ஏப் 2022) : நாட்டில் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பிரதமர் மோடியை வலியுறுத்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 108 முக்கிய பிரமுகர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்த அந்த கடிதத்தில் “முன்னாள் அரசு ஊழியர்களாகிய நாங்கள், இதுபோன்ற தீவிர வார்த்தைகளை வெளிப்படுத்த விரும்புவதில்லை, ஆனால் நமது நாட்டின் தந்தைகளால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு கட்டிடம் இடிக்கப்பட்டு வருகிறது, இது எங்கள் கோபத்தையும் வேதனையையும் வெளிபடுத்தத் தூண்டுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களான அசாம், குஜராத்,…

மேலும்...