நீட் தேர்வு குறித்து மாணவர்களுக்கு நடிகர் சூர்யா கோரிக்கை!

சென்னை (19 ஜூன் 2021): நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் யில் கூறியிருப்பதாவது: அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ‘கல்வியே ஆயுதம்’. ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியைத் தீர்மானிக்க ‘ஒரே தேர்வு முறை’ என்பது சமூக…

மேலும்...

பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்!

சென்னை (10 ஜூன் 2021): தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து பொது நுழைவுத் தேர்வுகளில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: “2019 – 2020ம் ஆண்டு கல்வித்துறை அமைச்சகத்தின் பள்ளி கல்வி மற்றும் கல்வி அறிவு விகிதத்துறை வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்த அறிக்கையின் படி இந்தியாவிலேயே கல்வித்தரத்தில் முதல் இடத்தில் உள்ள தமிழ்நாடு, A…

மேலும்...

தமிழ் நாட்டில் நீட் தேர்வு வாய்ப்பில்லை – கல்வி அமைச்சர் தகவல்!

சென்னை (07 ஜூன் 2021): தமிழ்நாட்டில் நீட் தேர்வு உட்பட எந்த நுழைவு தேர்வும் நடத்தக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், நீட் தேர்வு குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்தார். மேலும் ஆன்லைன்…

மேலும்...

நீட் தேர்வு ரத்து – குழு அமைத்து ஸ்டாலின் உத்தரவு!

சென்னை (05 ஜூன் 2021):: தமிழ்நாட்டில் நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள், தமிழ்வழி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்….

மேலும்...

நீட் தேர்வில் வெற்றி பெற்றும் வீண் – மருத்துவ படிப்பில் இடமில்லை!

விழுப்புரம் (07 நவ 2020): நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மாணவிக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தாய் தமிழ்ப் பள்ளி சுயநிதிப் பள்ளியாக இயங்கிவருகிறது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை இலவசமாக கல்வி பயின்ற மாணவி சந்திரலேகா, அருகிலுள்ள முருங்கம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை பயின்றுள்ளார். 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளிலும் மாணவி சந்திரலேகா…

மேலும்...

நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்களை கண்டுபிடிக்க முடியவில்லை – ஆதார் ஆணையம் தகவல்!

சென்னை (18 அக் 2020): நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 10 பேரின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர்கள் முறைகேடாக தேர்ச்சி அடைந்து, மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதில் மாணவர்கள், பெற்றோர், இடைத்தரகர் என 15க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஆள்மாறாட்டம், கூட்டுச்சதி, போலியாக ஆவணங்களை தயாரித்தல் ஆகிய 3 பிரிவுகளின்…

மேலும்...

நீட் தேர்வு வரலாற்றில் மாணவர் சுஹைப் அப்தாப் புதிய சாதனை!

புதுடெல்லி (17 அக் 2020): நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது இதில் ஓடிஸ்ஸா வை சேர்ந்த மாணவர் சுஹைப் அப்தாப் 720 க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். அதேபோல டெல்லியை சேர்ந்த அகன்ஸா சிங்கும் 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவர் சுஹைப் அப்தாபுக்கும் அகன்ஷா சிங்கிற்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.

மேலும்...

நீட் தேர்வு தற்கொலை விவகாரம் – ஸ்டாலினை மடக்கிய முதல்வர் எடப்பாடி!

சென்னை (15 செப் 2020): நீட் தேர்வு முறை கொண்டு வருவதற்கு திமுகவே காரணம் என்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தமிழக சட்டசபை கூட்டம் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாம் நாளாக சட்டசபை கூட்டம் நடந்துவரும் நிலையில், இன்றையை கூட்டத்தொடரில் நீட் தேர்வால் மன உளைச்சலில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பாக திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு…

மேலும்...

தமிழக அரசு மீது பாயும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

சென்னை (14 செப் 2020): நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞர் சூரியபிரகாசத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த 2018-ம் ஆண்டு அரியலூரைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார். அந்தச் சமயத்தில் மருத்துவப் படிப்பில் இடம் கோருவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். மேலும் .நீட் தேர்வு தற்கொலைகள் தொடர்பாக, வழக்கறிஞர் சூரியபிரகாசம், நீதிபதி கிருபாகரன் அமர்வில் விவாதிக்கப்பட்டது…..

மேலும்...

தாலியை கழட்டி விட்டு தேர்வெழுதிய புது மணப்பெண் – நீட் தேர்வு கொடுமையின் உச்சம்!

பாளையங்கோட்டை (14 செப் 2020): நீட் தேர்வு எழுத வந்த பெண் தாலியை கழட்டிவிட்டு தேர்வெழுதிய கொடுமை பாளையங்கோட்டையில் அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த திருமணமாகி 4 மாதம் ஆன புது மணப்பெண் ஒருவர் ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக பாளையங்கோட்டையில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுதுவதற்காக அந்த பெண் நேற்று தனது உறவினர்களுடன் பாளையங்கோட்டைக்கு வந்தார். அப்போது தேர்வு மையத்துக்குள் தாலி எதுவும் அணிந்திருக்கக் கூடாது என்று அந்த பெண்ணுக்கு…

மேலும்...