கம்ப்யூட்டர் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் மாணவர்கள் – நீதிமன்றம் கவலை!

சென்னை (01 ஜூலை 2021): ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தும் செல்போன், கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விளையாட்டுகளை தடை செய்யவும், இதுதொடர்பாக ஆய்வு செய்து கண்காணிப்பதற்கான நடைமுறையைக்  கொண்டு வரக்கோரியும் மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் அஜரான வழக்கறிஞர், “ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகளும், இளம் பருவத்தினரும், மாணவர்களும் விளையாட்டுகளில் உள்ள கதாபாத்திரங்களாக மாறிவிடுவதுடன், வன்முறை…

மேலும்...

12 மாம்பழங்களை ரூ.1.2 லட்சத்திற்கு விற்று ஆச்சரியப்படுத்திய ஏழைச் சிறுமி!

ஜார்கண்ட் (30 ஜூன் 2021): ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட் போன் இல்லாத ஏழை சிறுமியிடம் வெறும் 12 மாம்பழங்களை ரூ.1.2 லட்சத்திற்கு வாங்கி போன் வாங்க உதவி புரிந்துள்ளார் தொழிலதிபர் ஒருவர். கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டு அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாணவர்கள் ஸ்மார்ட் போனில் வகுப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஜார்கண்டின் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி துளசி குமாரி, ஆன்லைன் மூலம் படிக்க ஸ்மார்ட்போன் இல்லாமல்…

மேலும்...

ஆன்லைன் வகுப்பு விபரீதம் – 15 வயது சகோதரியை கர்ப்பமாகிய சிறுவன்!

ஜெய்ப்பூர் (20 ஜூன் 2021): செல்போனில் ஆன்லை வகுப்புக்காக குழந்தைகள் இணையத்தைப் பயன்படுத்துவதால், அவர்கள் ஆபாசமான மற்றும் தேவையற்ற தகவல்களை பார்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்படித்தான், ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சகோதரர் தனது 15 வயது சகோதரியுடன் செல்போனில் ஆபாச வீடியோவைப் பார்த்துள்ளார். பின்னர், இருவரும் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளனர். இதனால் தற்போது சிறுமி கர்ப்பமாக இருக்கிறார். இந்த கொடுமையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி, அதையடுத்து…

மேலும்...

ஆன்லைன் – காதல் – தற்கொலை ஹெச்,ராஜா கருத்து!

மதுரை (15 செப் 2020): ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலை நடப்பதாக குறை கூறினால் காதலாலும் தான் தற்கொலை நடக்கிறது என்பதற்காக காதல் செய்வதை தடை செய்ய முடியுமா என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலை நடப்பதாக குறை கூறினால் காதலாலும் தான் தற்கொலை நடக்கிறது என்பதற்காக காதல் செய்வதை தடை செய்ய முடியுமா? பைகளில் இலவச பொருட்களை வாங்கியவர்கள், மோடியால் மூட்டையில் வாங்கி செல்வதாக மக்கள் கூறுகின்றனர். மாநிலங்களுக்கான…

மேலும்...