அதானி மெகா ஊழல் பிரச்சனை – வலுக்கும் எதிர்கட்சிகளின் போராட்டம்!

புதுடெல்லி (09 பிப் 2023): அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளன. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்கும் வரை போராட்டத்தை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் கொள்கை அறிவிப்பு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜ்யசபாவில் பதில் அளிக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு ஒத்துழைத்த எதிர்க்கட்சிகள் இன்று முதல் மக்களவையில் அதானி விவகாரத்தில்…

மேலும்...

அதானி மோசடி விவகாரம் – நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்!

புதுடெல்லி (03 பிப் 2023): அதானி பங்குச்சந்தை மோசடி சர்ச்சையை எதிர்த்து இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு மூலம் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.காங்கிரஸ் எம்.பி.க்கள் ஹைபி ஈடன், டி.என்.பிரதாபன், பென்னி பஹானன் ஆகியோர் லோக்சபாவில் அவசர தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர். அதானி பங்கு சர்ச்சை குறித்து விவாதம் நடத்தக் கோரி ராஜ்யசபாவில் ஏ.ஏ.ரஹீம் எம்.பி நோட்டீஸ் அளித்திருந்தார். ஆனால் அவசர மனு நிராகரிக்கப்பட்டது. இதனால், எதிர்க்கட்சியினர் முழக்கங்களை…

மேலும்...

எட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் திடீர் இடை நீக்கம்!

புதுடெல்லி (21 செப் 2020): வேளாண் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்தபோது எதிர்ப்பு தெரிவித்த 8 அவை உறுப்பினர்களை மீதமுள்ள அமர்வுகளில் பங்கேற்க தடை விதித்து அவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, விவசாயிகளுக்கான விலை உறுதியளிப்பு மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் மூன்று மசோதாக்களும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. வேளாண் துறை…

மேலும்...

இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை – மக்களவையில் திமுக வாதம்!

புதுடெல்லி (14 செப் 2020): நீட் தேர்வால் இந்தியாவின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று மக்களவையில் டி.ஆர்.பாலு தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 9 மணிக்கு சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் அப்போது நீட் தேர்வு தற்கொலை குறித்த பிரச்சனையை திமுக எழுப்பியது. அப்போது திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசும்போது, ‘நீட் தேர்வின் காரணமாக 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்த…

மேலும்...

அமித் ஷா பதவி விலகும்வரை நாடாளுமன்றம் நடக்காது – எதிர் கட்சிகள் திட்டவட்டம்!

புதுடெல்லி (04 மார்ச் 2020): மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி இனப்படுகொலைக்கு மத்திய அரசே காரணம் என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் இத்தனை பேர் படுகொலையை தடுக்கத் தவறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பிரதிபலித்து வருகின்றன. டெல்லி…

மேலும்...

இடஒதுக்கீடு விவகாரம் – ஆ.ராசா நாடாளுமன்றத்தில் சரமாரி கேள்வி!

புதுடெல்லி (10 பிப் 2020): மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க எம்.பி., ஆ.ராசா இடஒதுக்கீடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், “பா.ஜ.க அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்தே, சமூக நீதிக்கும், இட ஒதுக்கீடு கொள்கைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். ஆ.ராசாவின் பேச்சுக்கு பா.ஜ.க எம்.பிக்களும், அமைச்சர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பா.ஜ.க உறுப்பினர்களின் கூச்சலைத் தொடர்ந்து பேசிய ஆ.ராசா, “உங்கள் அரசாங்கம் என்று நான் மத்திய…

மேலும்...