கச்சா எண்ணை கடும் விலை சரிவு – விலையை குறைக்க கோரிக்கை!

புதுடெல்லி (12 டிச 2022): கடந்த மார்ச் மாதத்தில் 129 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை, தற்போது சுமார் 50 டாலர்கள் குறைந்து 76 டாலருக்கு விற்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 200 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடர்கிறது. எனவே கச்சா எண்ணெயின் விலை சரிவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசலின் விலையை ஒன்றிய அரசு உடனடியாகக் குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

மேலும்...

இன்று உச்சத்தை தொட்ட பெட்ரோல் டீசல் விலை!

சென்னை (31 மார்ச் 2022): சென்னையில் இன்று (மார்ச் 31) பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, 107 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்து வந்த நிலையில், கடந்த 22ம் தேதியில் இருந்து விலை உயரத்தொடங்கியது. ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு விலையேற்றம் காணாமல் இருந்த பெட்ரோல் விலை தேர்தல் முடிந்த பிறகு ஒவ்வொரு நாளும் அதிகரித்தபடி உள்ளது. சென்னையில்…

மேலும்...

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்வு – பொதுமக்கள் அவதி!

சென்னை (13 பிப் 2021): பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 5-வது நாளாக உயர்ந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து 90.70 ரூபாய் எனவும், டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 83.86 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது….

மேலும்...