கொடிய நோயின் கோரத்தாண்டவமும் அரசின் நடவடிக்கையும்- ‘அம்வாஸின் பிளேக்’ வரலாற்றுக் குறிப்பு!

பாலஸ்தீனில் ஜெருசலம் நகருக்கும் ரம்லாவுக்கும் இடையே அம்வாஸ் என்றொரு சிறிய நகரம் அமைந்துள்ளது. கி.பி. 639-ம் ஆண்டில் அந்த ஊரில் பிளேக் நோய் தோன்றியது. சிறிது சிறிதாகப் பரவியது. வெகு விரைவில், அது பெருந் திகிலூட்டும் நிகழ்வாகவும் மாறியது. `அம்வாஸின் பிளேக்’ என்ற பெயரில் வரலாற்றில் வெகு அழுத்தமாகப் பதிவாகும் அளவுக்குப் பிரமாண்டமாய் உருமாறியது அந்நோய். இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பக் காலத்தை அறிந்தவர்களுக்கும் பல வாசகர்களுக்கும் உமர் என்ற பெயர் அறிமுகமாகியிருக்கும். முஸ்லிம்களுக்கும் நபி பெருமானாருக்கும் பெரும்…

மேலும்...