கர்ப்பிணிப் பெண்ணை சித்ரவதை செய்த போலீஸ் அதிகாரி!

ஒடிசா (30 மார்ச் 2021): ஒடிசாவில் கர்ப்பிணிப் பெண்ணை மூன்று கிலோமீட்டர் தூரம் நடக்க வைத்து சித்ரவதை செய்த சப்-இன்ஸ்பெக்டரை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடைநீக்கம் செய்துள்ளார். ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் குருபாரி என்ற கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவர் விக்ரம் பிருலி-யும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரத்தில் போலீஸ் ஹெல்மெட் பரிசோதனை நடத்தி வந்தனர். பரிசோதனையின்போது வாகனம் ஓட்டிவந்த விக்ரம் ஹெல்மெட் அணிந்திருந்தார். ஆனால் அவர் மனைவி குருபாரி உடல்நலக் காரணங்களால்…

மேலும்...

ஆறடி இடைவெளி அவசியம் – காதலர் தினத்தில் போலீஸ் அதிரடி!

மும்பை (14 பிப் 2021): கோவிட் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறடி இடைவெளியுடன் காதலர் தினம் கொண்டாட மும்பை போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து மும்பை போலீசார் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், “தூரம் அன்பை வலிமையாக்குகிறது, உங்கள் காதல் முகமூடி மற்றும் ஆறு அடி தூரம் இதுவே எங்களுக்கு தேவை ” என்று மும்பை காவல்துறை ட்விட்டரில் தெரிவிக்கபப்ட்டுள்ளது. .

மேலும்...

தாடி வளர்த்த முஸ்லிம் போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்!

லக்னோ (23 அக் 2020): உத்திர பிரதேசத்தில் தாடி வளர்த்ததற்காக முஸ்லிம் போலீஸ் அதிகாரி இந்திஸார் அலி என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆடைக் குறியீட்டை மீறியதாகவும், தனது மேலதிகாரிகளின் அனுமதியின்றி தாடியை வளர்த்ததாகவும் ஒரு இந்திஸார் அளி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராம்லா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டரான இவர்,, கடந்த ஒரு வருடமாக தாடியை வளர்ப்பதற்கான அனுமதி கோரியிருந்தார் ஆனால் அதற்கான எந்த அனுமதியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் தாடி வளர்த்தபோதும் அவருக்கு எச்சரிக்கை…

மேலும்...

கிராமத்தில் நுழைந்த போலீஸ் முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் – வீடியோ!

ஷாம்லி (31 மே 2020): உத்திர பிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் கிராமத்தில் நுழைந்த போலீஸார் பெண்கள் உட்பட பலர் மீது கண்முடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தின் தப்ரானா கிராமத்தில் மாட்டை கொலை செய்த வழக்கில் அப்சல் என்பவரை கைது செய்யச் சென்ற போலீசாருக்கும் கிராமத்தினருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்தே கிராம மக்கள் மீது போலிசார் தாக்குதல் நடத்தியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் கிராம மக்கள் கூறுகையில், போலீசார் திட்டமிட்டே கிராம மக்கள்…

மேலும்...

நீ முஸ்லிம் என்று நினைத்து அடித்தோம் – கா(வி)வல்துறையின் மத துவேஷ பதில்!

போபால் (20 மே 2020): காவல்துறையில் ஊடுருவியுள்ள காவிகளை அடையாளம் காட்டியுள்ளது இன்னொரு சம்பவம். மத்திய பிரதேசத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட தீபக் பந்துலே என்ற வழக்கறிஞரிடம் மன்னிப்பு கேட்டுள்ள போலீசார், “உங்களை முஸ்லிம் என்று நினைத்து தாக்குதல் நடத்தினோம்” என்று மத துவேஷத்துடன் காரணம் கூறியுள்ளது. இதுகுறித்து கூறிய தீபக் பந்துலே கூறியிருப்பதாவது: “நான் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி மத்திய பிரதேசம் பிதுல் பகுதியில் மருந்துப் பொருட்கள் வாங்க மருந்து கடைக்கு சென்றேன்….

மேலும்...

பால் வாங்க வெளியில் சென்றவர் போலீஸ் தாக்குதலில் மரணம்!

கொல்கத்தா (26 மார்ச் 2020): மேற்கு வங்கத்தில் பால் வாங்க வெளியில் சென்றவர் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 681 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது….

மேலும்...

பாஜகவினரிடமிருந்து பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு தேவை – காவல்துறையிடம் மனு!

திருப்பூர் (27 பிப் 2020): பாஜகவினரிடமிருந்து பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு கோரி திருப்பூர் காவல் நிலையத்தில் பிரியாணி கடைக்காரர்கள் மனு அளித்துள்ளனர். சிஏஏ வுக்கு ஆதரவாக பாஜக சார்பில் திருப்பூரில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெறவுள்ளது. பேரணியின்போது, பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு தர கோரி திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் கொல்லப்பட்ட சசிகுமார் என்ற இந்து முன்னணி பொறுப்பாளரின் இறுதி ஊர்வலத்தில் பிரியாணி அண்டா திருடப்பட்ட சம்பவத்தை அடுத்து,…

மேலும்...

பாஜக தலைவர்கள் மீது எப்போது வழக்கு பதிவு செய்வீர்கள்? முழு டெல்லியும் எரிந்த பிறகா?: நீதிபதி சரமாரி கேள்வி!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்திற்கு முன்பு வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி வன்முறை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியான முரளிதரன் தலைமையிலான அமர்வில் இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்களின் பாதுகாப்பை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றோம். எனவே இந்த வழக்கில் தான் கேட்கும் அனைத்து…

மேலும்...

டெல்லி கலவரத்திற்கு காவல்துறையே காரணம் – உச்ச நீதிமன்றம் காட்டம்!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி கலவரம் தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி கே.எம்.ஜோசப் முன்பு நடந்த இந்த விசாரணையில், காவல்துறையை நீதிபதி கடுமையாக சாடினார். வன்முறையின் போது உடனடி நடவடிக்கை எடுக்காமல், எதற்காக காத்திருக்க வேண்டும். ஏன் இந்த அளவிற்கு நிலைமையை கைமீறி போக விட்டீர்கள். காவல் துறையின் மெத்தனப் போக்கால் தான் பிரச்சினை பெரிதானது. டெல்லி கலவரம்…

மேலும்...

சிஏஏ போராட்டத்தில் போலீஸாரால் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்குப்பதிவு!

மீரட் (17 பிப் 2020): உத்திர பிரதேசம் மீரட்டில் சிஏஏ போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் குடும்பத்தினர் போலீஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில், கடந்த டிசம்பர் 20ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. 13 மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மதியம் மசூதிகளில் தொழுகையை முடித்தபின், தடையை மீறி போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலிஸார் கற்களை வீசியும், தடியடி நடத்தியும்…

மேலும்...