டெல்லி ஜும்மா மசூதியில் மீண்டும் போராட்டத்தில் குதித்த சந்திரசேகர் ஆசாத்!

புதுடெல்லி (17 ஜன 2020): டெல்லி ஜும்மா மசூதியில் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீண்டும் போராட்டம் நடத்தியுள்ளார். ஜாமீனில் வெளியாகியுள்ள சந்திரசேகர் ஆசாத், இன்றிரவு 9 மணிக்குள் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி ஜும்மா மசூதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். முன்னதாக கடந்த டிசம்பர் 21-ம்தேதி டெல்லி ஜாமா மசூதியில் சந்திர சேகர ஆசாத் கைது செய்யப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன்…

மேலும்...

முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்ததால் துன்புறுத்தப்பட்டேன் – சமூக ஆர்வலர் ராபின் வர்மா!

லக்னோ (16 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் ராபின் வர்மா சிறையில் பட்ட சித்ரவதைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதில், உத்திர பிரதேசம் லக்னோவில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளரும் ஆசிரியருமான ராபின் வர்மாவும் கைதானவர்களில் அடங்குவார்.. தற்போது வெளியாகியுள்ள அவர் போலீசார் பலர் தன்னை கடுமையாக…

மேலும்...

டெல்லியில் மீண்டும் பதற்றம் – ஜே.என்.யூ மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் – வீடியோ!

புதுடெல்லி (09 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது, போலிஸார் அவர்களைத் கொடூரமாக கையாண்டு கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி 5ம் தேதியன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், பல்கலை. ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி உள்ளிட்ட இந்துத்துவா…

மேலும்...

தீபிகா படுகோன் படத்திற்கு இலவச விளம்பரம் செய்யும் பாஜக!

மும்பை (09 ஜன 2020): நடிகை தீபிகா படுகோன் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது. ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இந்தி முன்னணி நடிகை தீபிகா படுகோன் போராட்டக்காரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தீபிகா படுகோன் நடித்த படங்களை புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் தாஜேந்தர் பால் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் பாஜக எதை எதிர்த்தாலும் அது விளம்பரமாக அமைந்து எதிர் தரப்புக்கு…

மேலும்...

சிறையில் ஆண் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டேன் – பெண் சமூக ஆர்வலர் சதாஃப் ஜாஃபர்!

லக்னோ (08 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைதாகி ஜாமீனில் வெளியாகியுள்ளார் சமூக ஆர்வலரும் காங்கிரஸ் பிரமுகருமான சதாஃப் ஜாஃபர். அவருக்கு சிறையில் நடந்த கொடுமைகளை விவரித்துள்ளார். குறிப்பாக, ” நான் பாகிஸ்தானி என்று அழைக்கப் பட்டு ஆண் போலீசாரால் கொடூரமாக தாக்கப்பட்டேன். சூ கால்கலால் உதைக்கப் பட்டேன். என்னைப் போன்று பல அப்பாவிகளுக்கு இந்த கொடுமைதான் நடக்கிறது. இத்தனைக்கும் அது மகளிர் காவல் நிலையம். அங்கு ஆண் காவலர்களின் ஆதிக்கம்…

மேலும்...

ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த எதிர் பாராத ஆதரவு – வீடியோ!

புதுடெல்லி (08 ஜன 2020): ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகை தீபிகா படுகோனே ஆதரவளித்துள்ளார். ஜேஎன்யுவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் மீது நடத்தப்பட்ட முகமூடி அணிந்திருந்த மர்ம கும்பலின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்தக் கூட்டதத்தில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் சீதாராம் யெச்சூரி, கண்ணையா குமார், டி. ராஜா மற்றும் யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுதவிர பாலிவுட் நடிகை தீபிகா…

மேலும்...

மேற்கு வங்கத்தில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!

கொல்கத்தா (07 ஜன 2020): டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் விதமாக கொல்கத்தாவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அயிஷ் கோஷ் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் காயம் அடைந்த 20 மாணவர்கள் எய்ம்ஸ்…

மேலும்...

சட்டசபைக்கு வித்தியாசமாக வந்த தமிமுன் அன்சாரி!

சென்னை (06 ஜன 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் விதமாக சட்டசபைக்கு எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கருப்பு சட்டை அணிந்து வந்தார்.

மேலும்...

தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவு!

சென்னை (05 ஜன 2020): ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் தொழிலாளர் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தொழிலாளர்களின் நலனுக்காகப் பாடுபட்டு வரும் ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் தங்களின் 14 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஜனவரி 8 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் நடத்தும் மாபெரும் போராட்டத்திற்கு திராவிட…

மேலும்...