கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில் உள்ள லுலு எக்ஸ்பிரஸ்ஸின் பின்புறம் உள்ள பல மாடி கட்டிடம் அருகில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தின் மேல் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டனர். இந்த தகவலை கத்தார் சிவில் டிஃபென்ஸ்…

மேலும்...

கத்தாரில் ஹயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு அவசர உத்தரவு!

தோஹா (21 ஜன 2023): ஹயா அட்டை வைத்திருப்பவர்கள் 23 நாட்களுக்குள் கத்தாரை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக, ஹயா அட்டையில் கத்தாருக்கு வந்தவர்கள் ஜனவரி 23 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். ஹயா அட்டையில் கத்தாருக்கு வருபவர்கள் நவம்பர் 1 முதல் ஜனவரி 23 வரை அனுமதிக்கப்பட்டனர். இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நேரம் நீட்டிக்கப்படும்…

மேலும்...

மத்திய கிழக்கில் மிகப்பெரிய பிளாஸ்டிக் ஆலையை நிறுவுகிறது கத்தார்!

தோஹா (09 ஜன 2023): மத்திய கிழக்கின் மிகப்பெரிய பிளாஸ்டிக் ஆலை கத்தாரில் அமைக்கப்படவுள்ளது. கத்தார் எனர்ஜி மற்றும் செவ்ரான் பிலிப்ஸ் கெமிக்கல் இணைந்து இந்த ஆலையை அமைக்கிறது. 6 பில்லியன் டாலர் செலவில் பிளாஸ்டிக் ஆலை அமைக்கப்படும். இந்த ஆலை இயற்கை எரிவாயுவை பாலிதீன் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்களாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இந்த ஆலை 2026ல் செயல்படத் தொடங்கும். கத்தார் எரிசக்தி நிறுவனமும், டெக்சாஸைச் சேர்ந்த செவ்ரான் நிறுவனமும் இது தொடர்பான புரிந்துணர்வு…

மேலும்...

மெஸ்ஸியின் கனவு வென்றது – உலகக் கோப்பையுடன் அர்ஜெண்டினா!

தோஹா (19 டிச 2022): 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் அரங்கேறிய மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் பலப்பரீட்சையில் இறங்கின. கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையையும் தன்னகத்தே ஈர்த்த இந்த இறுதியுத்தம் முதல் வினாடியில் இருந்தே விறுவிறுப்பாக நகர்ந்தது….

மேலும்...

உலகக் கோப்பை ஜுரத்தின் இடையே குளிர் காலத்தை வரவேற்கும் கத்தார்!

தோஹா (14 டிச 2022): கத்தாரில் குளிர் அதிகமாக உள்ளது. நாட்டில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலையாக 12 செல்சியஸ் பாகையாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 செல்சியஸ் பாகையாகவும் பதிவாகியுள்ளது. மிசைட் (13), வக்ரா (16), தோஹா விமான நிலையம் (18), கத்தார் யூனி (17), அல் கோர் (14), கரானா (14), அபு சாம்ரா (16) மற்றும் குவைரியா (16) செல்சியசாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. தோஹா நகரில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும்,…

மேலும்...

உலக கால்பந்தாட்ட ரசிகர்களை சிலிர்க்க வைக்கும் கத்தார் சிறுமிகள்!

தோஹா (02 டிச 2022): தோஹாவின் மெட்ரோ ரயில் நிலையங்களில் உலகக் கோப்பை ரசிகர்களை அன்பால் போர்த்தி இனிப்புகளுடன் வரவேற்கும் கத்தார் சிறுவர் சிறுமிகளைப் பார்த்து கால்பந்தாட்ட ரசிகர்கள் சிலிர்த்துப் போகின்றனர். அரபு நாடுகள் மற்றும் கத்தாரின் விருந்தோம்பலை இந்த குழந்தைகள் உலகிற்கு காட்டி ஆச்சர்யப்படுத்துகின்றனர். உலகக் கோப்பை கால்பந்துக்கு வரும் ரசிகர்களின் முக்கிய பயண பாதை தோஹா மெட்ரோ ஆகும். போட்டி நேரத்தில் மெட்ரோ நிரம்பியிருக்கும். ஒவ்வொரு நிலையமும் வெவ்வேறு மொழிகள் மற்றும் கலாச்சாரங்களின் கலவையாகும்….

மேலும்...

கத்தார் உலகக்கோப்பை தொடக்க விழா நட்சத்திரம் கானிம் அல் முஃப்தா இந்தியா வர அழைப்பு!

தோஹா (28 நவ 2022): கத்தார் உலகக்கோப்பை தொடக்க விழா நட்சத்திரம் கானிம் அல் முஃப்தாவை இந்தியாவிற்கு வருமாறு அழைத்துள்ளார், கேரள மாநிலத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி அசிம் வெலிமன்னா. அசிம் வெலிமன்னா உலகக்கோப்பை போட்டியை காண்பதற்காக கத்தார் வந்துள்ளார். அவரை கானிம் அல் முஃப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தனர். இந்நிலையில் கானிம் அல் முஃப்தாவை இந்தியாவிற்கு அழைத்துள்ளார் அசிம் வெலிமன்னா. மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கான போராட்டங்களில் குறிப்பிடத் தக்கவர் ஆசிம் என்பது…

மேலும்...

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து சவூதி அணியின் கேப்டன் விலகல்!

தோஹா (28 நவ 2022): கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து காயம் காரணமாக சவூதி அணியின் கேப்டன் சல்மான் அல்-ஃபராஜ் விலகியுள்ளார். கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியில் சவூதி அணியின் கேப்டன் சல்மான் அல்-ஃபராஜ் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சை காரணமாக போட்டியிலிருந்து விலக்கப் பட்டுள்ளார். சல்மான் அல்-ஃபராஜ் தொடர்ந்து விளையாட முடியாது என்கிற மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் அவர் உலகக் கோப்பை போட்டியிலிருந்து…

மேலும்...

ஒட்டகக் காய்ச்சல் – கத்தார் உலகக் கோப்பை கால்பந்துக்கு ஆபத்தா? உண்மை நிலவரம்!

தோஹா (27 நவ 2022): வளைகுடா நாடான கத்தாரில் 2022 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டி நடைபெற்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதே வேளையில், பிற மேற்கத்திய நாடுகளில் இதுவரை நடந்த உலகக் கோப்பை போல் அல்லாமல் பல கட்டுப்பாடுகளை கத்தார் அரசு விதித்துள்ளது. குறிப்பாக மதுபானம், ஓரினச் சேர்க்கை, விபச்சாரம், ஆடைக் குறைப்பு உள்ளிட்டவைகளில் கத்தார் அரசு எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை. இதனால் மேற்கத்திய நாடுகள், கத்தார் அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி…

மேலும்...

இஸ்ரேல் கோரிக்கையை நிராகரித்தது கத்தார்!

தோஹா (15 செப் 2022): உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒட்டி கத்தாரில் தற்காலிக தூதரகத்தை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் நிராகரித்துள்ளது. உலகக் கோப்பையை காண வரும் இஸ்ரேல் மக்களுக்கு உதவி புரியும் விதமாக கத்தாரில் தற்காலிக தூதரகம் அமைக்க இஸ்ரேல் கோரிக்கை வைத்ததாகவும் அந்த கோரிக்கையை கத்தார் நிராகரித்ததாக உள்ளூர் அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2008 காசா தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை கத்தார் துண்டித்தது. சர்வதேச…

மேலும்...