மாணவர்களுடன் ஆட்டம் போட்ட ராகுல் காந்தி!

சென்னை (01 மார்ச் 2021): காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மாணவர்களுடன் குதூகலமாக ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ராகுல் காந்தி தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்தில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபாட்டுள்ளார். அப்போது மாணவர்களுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் ராகுல் காந்தி மாணவர்களுடன் நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முலகுமூடு புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் ராகுல் காந்தி…

மேலும்...

மீனவர்களுடன் மீன்பிடித்த ராகுல் காந்தி!

கொல்லம் (25 பிப் 2021): காங்கிரஸ் கட்சியின் ஒரேயொரு நம்பிக்கை நட்சத்திரமாக உலா வருபவர் ராகுல் காந்தி. அவர் செல்லும் ஒவ்வொரு ஊரிலும் ஏதாவது செய்து மக்களின் கவனத்தை ஈர்ப்பார், அந்த வகையில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக கேரளாவின் கொல்லம் மாவட்டத்திற்கு பயணம் செய்தபோது அங்குள்ள தங்கசேரி கடற்கரைக்குச் சென்றார். அப்போது கடலில் குதித்தார். பிரச்சாரத்திற்கு சென்ற ராகுல் அங்குள்ள மீனவர்களுடன் படகில் பயணம் செய்தார். அங்கு அவர்கள் சமைத்த மீனை அவர்களோடு சேர்ந்து ராகுலும்…

மேலும்...

காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் உற்சாகம் கொடுக்கும் முடிவு!

புதுடெல்லி (01 பிப் 2021): மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. டெல்லி மாநில காங்கிராஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பின், மாநில தலைவர் அனில்குமார் கூறியதாவது: “நாட்டில் மிகவும் ஆபத்தான அரசியல் சூழல் நிலவுகிறது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அடுத்தடுத்து தவறான முடிவுகளை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து, ராகுல் தொடர்ந்து போராடி வருகிறார். ஜனநாயக விரோத சக்திகளை விரட்டவும், காங்கிரஸ்…

மேலும்...

ராகுலுடன் ஒரே நாள் – ஓஹோவென பிரபலமான யூடூப் சேனல்!

சென்னை (30 ஜன 2021): காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த யூடியூப் உணவு சேனலான கிராம சமையலுடன் இணைந்து உணவு சாப்பிட்ட வீடியோ அதி வேகத்தில் வைரலாகி வருகிறது, தமிழககத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி பலவேறு கிராம மக்களுடனும், விவசாயிகளுடனும் கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில் யூடூபில் கிராம சமையல் என்ற பெயரில் செயல்பட்டு வரும் யூடூப் சேனல் தயாரித்த காளான் பிரியாணியை உணவு தயாரிக்கும் குழுவுடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டார்….

மேலும்...

மவுனம் கலைத்த ராகுல் காந்தி!

புதுடெல்லி (20 டிச 2020): மீண்டும் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க ராகுல் காந்தி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, முன்னாள் மத்திய…

மேலும்...

டெல்லி போராட்டத்தில் 11 விவசாயிகள் பலி – மோடி அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (12 டிச 2020): மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டம் இன்று 17–வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்தில் இதுவரை 11 விவசாயிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான பத்திரிகை செய்தியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று இணைத்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘‘வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதற்காக இன்னும் எத்தனை…

மேலும்...
Sanjay Rawath

ராகுல் காந்திக்கு ஆதரவாக ஒபாமா மீது சிவசேனா கடும் தாக்கு!

புதுடெல்லி (14 நவ 2020): ராகுல் காந்தி குறித்த ஒபாமாவின் விமர்சனத்திற்கு சிவசேனா ஒபாமாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா அவர் எழுதியுள்ள புத்தகத்தில் ராகுல் காந்தி குறித்து பாடங்களை சரியாக படிக்காத மாணவர் என்பதாக விமர்சித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி ஒரு ஆசிரியருக்கு முன்னால் தான் எல்லாம் தெரிந்ததை போன்று பாசாங்கு செய்ய முயற்சிக்கும் மாணவனைப் போன்றவர் என்று பராக் ஒபாமா கூறியிருந்தார். ஒபாமாவின் இந்த கருத்திற்கு சிவசேனா தலைவர் சஞ்சய்…

மேலும்...

மத்திய பாஜக அரசின் மற்றுமொரு சாதனை – ராகுல் காந்தி சாடல்!

புதுடெல்லி (16 அக் 2020): மத்திய அரசின் மற்றும் ஒரு சாதனையாக கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானோடு போட்டி போட முடியவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகியிருந்த பொருளாதாரம் கொரோனாவால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய அரசு தவறிவிட்டதாகவும் பலதரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் மத்திய அரசை மீண்டும் விமர்சித்துள்ள ராகுல் காந்தி, கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் பாகிஸ்தான்,…

மேலும்...

எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும் – ராகுல் காந்தி கருத்து!

புதுடெல்லி (02 அக் 2020): எல்லா துன்பங்களையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று ராகுல் காந்தி அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “உலகில் நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்; யாருடைய அநீதிக்கும் தலைவணங்க மாட்டேன். பொய்யை உண்மையுடன் வெல்வேன்; பொய்யை எதிர்க்கும்போது எல்லா துன்பங்களையும் என்னால் தாங்க முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும்...

ராகுல் காந்தி மீது போலீசார் தாக்குதல் நடத்தி கைது – உத்திர பிரதேசத்தில் பரபரப்பு!

லக்னோ (01 அக் 2020): உத்திர பிரதேசத்தில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ளது. குற்றவாளிகளை தூக்கிலிடவும், போலீசாரின் அடாவடியை எதிர்த்தும் இளம்பெண்ணின் உறவினர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக ஹத்ரஸ் மாவட்டத்தில் வெளியாட்கள் நுழையாதவாறும், உள்ளூர் மக்கள் வெளியில் சுற்றத்தவாறும்…

மேலும்...