சவூதி அரேபியா ஜித்தாவில் பாதாள வழிகள் மூடல் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஜித்தா (02 ஜன 2023): சவூதி அரேபியா ஜித்தாவில் பெய்த பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பல்வேறு பாதாள சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன சாலையில் இணையும் அமீர் மஜித் சுரங்கப்பாதை வடக்கிலும், அல்ஜாமியா சுரங்கப்பாதை இருபுறமும், கிங் அப்துல்லா சாலை மற்றும் மதீனா சாலையும், கிங் அப்துல்லா சாலை மற்றும் கிங் ஃபஹத் சாலையும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த பாதாள சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் மாற்று வழிகளை பயன்படுத்த…

மேலும்...

சவூதியில் கனமழை எச்சரிக்கையை அடுத்து கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

ஜித்தா(01 ஜன 2023)- சவூதியில் மழை தீவிரமடையும் என்ற எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, நாளை (திங்கட்கிழமை) ஜித்தா, தாயிப் பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கா, ஜுமூம், அல்காமில் மற்றும் பஹ்ரா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படும் என மக்கா கல்வித்துறை முன்னதாக அறிவித்திருந்தது. நாளை பிற்பகல் 3 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை…

மேலும்...

சவூதியின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ரியாத் (29 டிச 2022): சவுதி அரேபியாவின் பல்வேறு மாகாணங்களில் நாளை முதல் மழை பெய்யும் என தேசிய வானிலை மையம் கணித்துள்ளது. இடி மின்னலுடன் கூடிய கனமழையால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும். கடலோரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை, தூசி நிறைந்த காற்று மற்றும் உயரமான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மக்கா,…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை!

துபாய் (28 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை நேரத்தில் வெளியே செல்லும் போதும் வாகனம் ஓட்டும் போதும் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. ஷார்ஜா அஜ்மான் ராஸ் அல் கைமாவில் காலை முதல் பலத்த மழை பெய்து…

மேலும்...

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை (25 டிச 2022): தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (25ஆம் தேதி) காலையில் இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிறகு மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 26ஆம் தேதி காலையில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை…

மேலும்...

புனித மக்காவில் திடீர் மழை வெள்ளம் – அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் – VIDEO

மக்கா (24 டிச 2022): சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரை வெள்ளிக்கிழமை திடீர் வெள்ளம் தாக்கியது, கார்கள் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டன. எனினும் சேதங்கள் குறித்து தகவல் இல்லை. பல முக்கிய சாலைகள் மூடப்பட்ட நிலையில் கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. எதிர்பாராத இடியுடன் கூடிய மழை மற்றும் வெள்ளத்தால் மக்காவிற்கு வந்துள்ள உம்ரா யாத்திரிகர்கள் திகைத்து நின்றனர். எதிர்பாராத சூழ்நிலையைச் சமாளிக்க 200க்கும் மேற்பட்ட…

மேலும்...

சவூதியில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ரியாத் (20 டிச 2022): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வெள்ளிக்கிழமை வரை மழை தொடர வாய்ப்புள்ளது. சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் பருவநிலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழையுடன் இடியுடன் கூடிய மழை, புழுதி காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மக்கா, அல்பாஹா, அல்…

மேலும்...

அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை (20 டிச 2022): தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்பதால் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை…

மேலும்...

சவூதி வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் பலி!

ரியாத் (17 டிச 2022): சவுதி அரேபியாவில் வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தெற்கு சவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் பகுதியில் உள்ள மஜ்ரிதா கவர்னரேட்டில் பெய்த மழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிவில் பாதுகாப்பு குழு வெள்ளத்தில் இருந்து ஒருவரின் உடலை வெளியே எடுத்தது. மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சவுதி அரேபியாவில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேற்குப்…

மேலும்...

சவூதியில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ரியாத் (12 டிச 2022): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு முதல் வியாழன் வரை மிதமானது முதல் பலத்த மழை, இடி, காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரியாத், ஜித்தா, மக்கா, மதீனா, தாயிப் என அனைத்து பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை எச்சரிக்கை காரணமாக ஜித்தா, ராபிக் மற்றும் குலைஸ் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக…

மேலும்...