வங்கக்கடலில் புயல் சின்னம்!

சென்னை (06 டிச 2022): வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று மாலைக்குள் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அப்போது காற்று தமிழகம் மற்றும் ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த…

மேலும்...

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பேரிடர் மீட்புப்படை விரைவு!

சென்னை (06 டிச 2022): தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறுகிறது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறும் நிலையில் டிசம்பர் 8 ஆம் தேதி இது புயலாகவும் தீவிரமடைகிறது. இதற்கு மாண்டஸ் என பெயரிடப்படுகிறது. இந்த பெயரை ஐக்கிய அரபு நாடுகள்…

மேலும்...

வரும் 8 ஆம் தேதி கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை (06 டிச 2022): தமிழகத்தில் வரும் 8ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 6-ம் தேதி மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில்…

மேலும்...

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி – கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை (05 டிச 2022): அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (டிச. 5) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அதற்கடுத்த 48 மணி…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

துபாய் (03 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மூடுபனியும் கூடும் என மதிப்பிடப் பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கிழக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பனிமூட்டம் காரணமாக, வாகனங்களை மெதுவாகச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பின்வரும் சாலைகளில் வேகக் குறைப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: Al Saad – Sweihan road: 80 km/h Trucks…

மேலும்...

தமிழகத்தில் சுழற்றி எடுக்கவுள்ள காற்றும் மழையும்!

சென்னை (01 டிச 2022): தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் அந்தமான் அருகே டிசம்பர் 5ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இன்றைய தினம் தமிழகம், புதுச்சேரிக்கு நல்ல மழை இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.. மேலும் அரபிக்…

மேலும்...

சவூதி அரேபியாவில் மீண்டும் கனமழை – பொதுமக்களுக்கு சிவில் பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை!

ரியாத் (30 நவ 2022): சவுதியில் மேற்கு பகுதியில் பெய்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்றும் மழை தொடரும் எனவும், மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் சிவில் பாதுகாப்பு பிரிவினர் எச்சரித்துள்ளனர். தபூக் பகுதி, துபா அல்-வாஜ், உம்லுஜ், மதீனா மற்றும் யாம்பு ஆகிய இடங்களில் நேற்று கனமழை பெய்தது. தபூக் பகுதியில் சில தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின….

மேலும்...

தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை (19 நவ 2022): தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,” தென்கிழக்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது வலு பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து…

மேலும்...

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தீவிரமாக இருக்கும் – வெதர்மேன் எச்சரிக்கை!

சென்னை (08 நவ 2022): தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தீவிரமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 9ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு இசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து…

மேலும்...

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – 10 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை (05 நவ 2022): வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த 5 நாட்களாக விடிய விடிய மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகளான செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரிகள் என அனைத்தும் நிரம்பி வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயர்வான 24 அடியில் 21.03 அடியை எட்டியது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக…

மேலும்...