ராஜஸ்தான் கலவரத்தை தொடர்ந்து முஸ்லீம் முதியவர் படுகொலை!

அஜ்மீர் (10 ஏப் 2022): ராஜஸ்தான் கலவரத்தின் அடுத்த நாள் 55 வயது முஸ்லீம் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் கரௌலியில் ஏப்ரல் 3 அன்று, வன்முறையாக மாறிய பைக் பேரணியைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான 40 கடைகள் தாக்கப்பட்டன. கலவரத்தின் அடுத்த நாள் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பீவாரில் 55 வயது சலீம் என்ற முஸ்லீம் முதியவர் அடித்துக் கொல்லப்பட்டார், சம்பவ இடத்தில் இருந்த, சலீமின் பக்கத்து வீட்டுக்காரர் ஷாபாஸ் கூறுகையில், கொலை நடந்த…

மேலும்...

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை முந்திய காங்கிரஸ்!

ஜெய்ப்பூர் (31 ஜன 2021): ராஜஸ்தான் நகராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காங்கிரஸ் முன்னணி வகிக்கிறது. இதுவரை வெளியாகியுள்ள 2601 இடங்களில் காங்கிரஸ் 1012 இடங்களிலும் . பாஜக 947 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. 20 மாவட்டங்களில் உள்ள 90 உள்ளாட்சி அமைப்புக்களுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 3035 வார்டுகளில் 994க்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெறு…

மேலும்...

விலை பேசும் பாஜக – கூவத்தூர் ஸ்டைலில் எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டில் அடைப்பு!

ஜெய்ப்பூர் (11 ஜூன் 2020): ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக விலைபேசுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜெய்ப்பூரில் உள்ள ரிசார்ட்டில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆளும் காங்கிரசுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையில் ராஜஸ்தானில் முழு அளவிலான அரசியல் போர் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜக ரூ.25 கோடியை வழங்குவதாகக் கூறியுள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லாட் பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார். இதனை அடுத்து ராஜஸ்தான் காங்கிரஸ் தனது எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு…

மேலும்...

கொரோனாவை எதிர்த்து தீபாவளி – குடிசைகள் எரிந்து பயங்கர விபத்து!

ஜெய்ப்பூர் (06 ஏப் 2020): பிரதமர் மோடியின் வேண்டுகோளை அடுத்து ராஜஸ்தானில் தீபம் ஏற்றியபோது பட்டாசு வெடித்ததால் அவை குடிசைகளில் பட்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையில் மூன்றாவது முறையாக கரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “வரும் ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச்,…

மேலும்...

ராஜஸ்தானில் காஷ்மீர் இளைஞர் அடித்துக் கொலை!

ஜெய்ப்பூர் (08 பிப் 2020): ராஜஸ்தானில் காஷ்மீர் இளைஞர் பாஸித் கான் (20) அவருடன் பணிபுரிபவர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி ஜெய்ப்பூரில் பணிக்குச் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தபோது அவருடன் பணிபுரியும் 6 பேர் கொண்ட கும்பல் பாஸித் கானை கொடூரமாக தாக்கியுள்ளது. படுகாயம் அடைந்த பாஸித்கான் அருகில் உள்ள மருத்துவமனையில் அவருடன் சென்ற நண்பர்களால் அனுமதிக்கப் பட்டார். எனினும் மருத்துவர்கள் பாஸித் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கொலைக்கான காரணம்…

மேலும்...

பொருளாதாரம் குறித்து தெரிந்தால்தானே அதைப்பற்றி சிந்திக்க முடியும் – மோடி மீது ராகுல் பாய்ச்சல்!

ஜெய்ப்பூர் (29 ஜன 2020): பொருளாதாரம் குறித்த புரிதல் பிரதமருக்கு இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் யுவ ஆக்ரோஷ் எனும் பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பின்பற்றப்பட்ட பொருளாதார மதிப்பீடுகள் மீது கணக்கிட்டால் இப்போதுள்ள பொருளாதார வளர்ச்சி…

மேலும்...

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்திலும் தீர்மானம் நிறைவேறியது!

கொல்கத்தா (27 ஜன 2020): குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நான்காவது மாநிலமாக மேற்கு வங்கத்திலும் தீர்மானம் நிறைவேறியது. சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம் திங்களன்று நான்காவது மாநிலமாக மாறியது. தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) திரும்பப் பெறவும், குடிமக்களின் தேசிய பதிவேட்டை (NRC) முன்மொழியப்பட்ட பான்-இந்தியா செயல்படுத்தவும் இது அரசாங்கத்தை கோரியது. பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை மேற்கு வங்க நாடாளுமன்ற…

மேலும்...

கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்!

ஜெய்ப்பூர் (25 ஜன 2020): கேரளா, பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டம் குறித்த மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நான்கு வாரம் கால அவகாசமும் வழங்கியுள்ளது. மேலும், “அரசு முடிவை கேட்காமல் எந்தவொரு தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது”…

மேலும்...