ஆளுநர் பதவியிலிருந்து விலக முடிவு!

மும்பை (24 ஜன 2023): மகாராஷ்டிர ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது ஆளுநர் – முதல்வர் இடையே சிறுசிறு மோதல் நிலவி வந்தது. பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பா.ஜ.க.வுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், மகாராஷ்டிர ஆளுநர் பதவியில் இருந்து விலக பகத்சிங் கோஷ்யாரி முடிவு…

மேலும்...

பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு!

சென்னை (03 ஜன 2023): அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: “பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்தை இதயத்துடன் எடுக்கிறேன். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜகவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து…

மேலும்...

தெலுங்கானா காங்கிரஸில் 13 மூத்த தலைவர்கள் ராஜினாமா!

ஐதராபாத் (19 டிச 2022): தெலுங்கானா மாநில காங்கிரசில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டியின் 13 தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும், மற்றவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ராஜினாமா செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏ தனாசாரி அனுசுயா, முன்னாள் எம்எல்ஏ வேம் நரேந்திர ரெட்டி ஆகியோர் ராஜினாமா செய்தவர்களில் அடங்குவர். ராஜினாமா கடிதத்தில், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மாநிலத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருவதாக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்….

மேலும்...

ஒன்றிய அமைச்சர் பதவியிலிருந்து முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா!

புதுடெல்லி (07 ஜூலை 2022): பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வி, ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜ்யசபா பதவிக்காலம் இன்று முடிவடைய உள்ள நிலியில் ஒரு நாள் முன்னதாக, நேற்று அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் இது குறித்த கூட்டத்தில், ஒரு அமைச்சராக நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நக்வி ஆற்றிய பங்களிப்பிற்காக பிரதமர் மோடி நக்வியை பாராட்டினார். நக்வியுடன், ராம் சந்திர பிரசாத்…

மேலும்...

பாஜக எம்.பி. கட்சியிலிருந்து விலகல்!

காந்திநகர் (29 டிச 2020): குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மன்சுக் பாய் வசவா பாஜகவிலிருந்து விளக்கியுள்ளார். மேலும் எம்பி பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார். குஜராத்தின் பருச் நகரைச் சேர்ந்த எம்.பியான . வாசவா, அங்கிருந்து ஆறு முறை . தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். பாஜக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ராஜினாமா செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .

மேலும்...

டெல்லியில் தொடரும் பரபரப்பு – விவசாயிகளுக்கு ஆதரவாக டிஐஜி பதவி விலகல்!

புதுடெல்லி (14 டிச 2020): மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாப் சிறை டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங் ஜாகர் பதவி விலகியுள்ளார். டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங் தனது ராஜினாமாவை உள்துறை துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக கூறினார். டெல்லியில் உள்ள போராட்ட காலத்திற்கு விரைவில் வருகை தருவதாக அவர் கூறினார். மேலும் அவரது ராஜினாமா குறித்து அவர் கூறுகையில் “நான் அடிப்படையில் ஒரு விவசாயி, பின்னர்தான் நான் ஒரு போலீஸ்காரராக இருக்க…

மேலும்...

அதிர்ச்சி – கொரோனா வார்டுகளில் பணிபுரியும் 300 நர்ஸ்கள் (செவிலியர்) ராஜினாமா!

கொல்கத்தா (21 மே 2020): கொல்கத்தாவில் இனப்பாகுபாடு காட்டுவதாகக் கூறி 300 செவியிலர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்புக்கு 2,961 பேர் தீவிர சிகிச்சை பெற்றும், 1000 -த்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியும் உள்ளனர். இதுவரை 250 பேர் பலியாகி உள்ளனர். இதனால் நாட்டில் அதிக பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்திற்கு அடுத்து 4வது இடத்தில் மேற்கு வங்காளம் உள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள மருத்துவமனைகளில்…

மேலும்...

மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ராஜினாமா!

போபால் (20 மார்ச் 2020): மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் எம்.எல்.ஏக்கள் 19 பேர் காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து மத்திய பிரதேச மாநில கமல்நாத் தலைமையிலான அரசு ஆட்டம் கண்டது. இதனை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு முன்னதாக கமல்நாத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும்...

அதிர்ச்சி : மலேசிய பிரதமர் மகாதிர் முஹம்மது பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா!

கோலாலம்பூர் (24 பிப் 2020): மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். 94 வயதான மகாதீர் முகம்மது, உலகின் அதிக வயதுடைய பிரதமர் என்ற பெயரையும் பெற்றவர். இந்நிலையில் இன்று அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை மன்னரிடம் இன்று ஒப்படைக்கவுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த மகாதீர் முகம்மதுவின் திடீர் ராஜினாமா உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் சார்ந்த பெர்சாத்து கட்சியின் தலைவர்…

மேலும்...

காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ராஜினாமா!

புதுடெல்லி (12 பிப் 2020): டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று அக் கட்சியின் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ ராஜினாமா செய்துள்ளார். 70 இடங்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாஜக எட்டு இடங்களை கைபற்றியது. ஆனால் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட்டுகளை இழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவை…

மேலும்...