ஒரு வதந்தி பரவிய நிலையில் அடுத்த வதந்தி – பாஜக பிரமுகரை பிடிக்க தனிப்படை டெல்லி விரைவு!

சென்னை (05 மார்ச் 2023): தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்தி பரப்பிய உத்திர பிரதேச பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்வ்வை பிடிக்க தனிப்படை டெல்லி விரைந்துள்ளது. தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பிய உ.பி. பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்ராவ் டெல்லிக்கு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து டெல்லியில் பதுங்கி இருக்கும் பிரசாந்த் உமாராவை கைது செய்ய தமிழ்நாடு தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர்…

மேலும்...

மாடு கடத்தியதாக வதந்தி – முஸ்லீம் இளைஞர் மீது கொடூர தாக்குதல்!

லக்னோ (22 மார்ச் 2022): உத்தரப் பிரதேசத்தில், மாடு கடத்தியதாகக் கூறி, பசுக் குண்டர்களால் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். விலங்குகளின் கழிவுகளை அகற்றும் வாகன ஓட்டுநராக 35 வயது அமீர் என்பவர் மீது பசு குண்டர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

நடிகை ஷக்கீலா மரணம்? – ஷக்கீலா வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை (30 ஜூலை 2021): நடிகை ஷகீலா இறந்துவிட்டார் என்று வெளியான வதந்திக்கு நடிகை ஷக்கீலாவே பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமூக வலைதளத்தில் நடிகை ஷக்கீலா இறந்துவிட்டதாக யாரோ ஒருவர் கேரளாவில் வெளியிட்ட தகவல் தீயாய் பரவி அவரது ரசிகர்களை அதிர்ச்சியுறச் செய்தது. இந்நிலையில் அது பொய்யானதகவல் என்பதை அவரே வெளியிட்டுள்ள வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நான் இதோ நலமாக இருக்கிறேன், மிகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்…..

மேலும்...

முஸ்லிம்கள் மீது வதந்தி பரப்பி போலீசிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட பாஜக எம்பி!

புதுடெல்லி (16 மே 2020): கிழக்கு டெல்லியில் பாஜக எம்பி பர்வேஸ் வர்மா, முஸ்லிம்கள் சாலையில் தொழுகை நடத்துவது போன்ற பழைய வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு டெல்லி போலிசிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். பர்வேஸ் வர்மாவின் பதிவில், “ஊரடங்கு நேரத்தில் சமூக விலகல் விதிமுறைகளை மீறுவதாகக் கூறி முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துகின்றனர். இதற்கு அனுமதி அளிக்கிறதா போலீஸ்?” என்று அவர் பதிவிட்டிருந்தார். மேலும் பதிவில் ஒரு வீடியோவையும் இணைத்திருந்தார். இதற்கு பதிலளித்த…

மேலும்...

நான் நலமுடன் உள்ளேன் – வதந்திகளுக்கு அமித் ஷா முற்றுபுள்ளி!

புதுடெல்லி (09 மே 2020): தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும், முழு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பல்வேறு அமைச்சரவைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படங்களில் அமித் ஷா சோர்வாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இவ்வாறான புகைப்படங்களைக் கொண்டு, அமித் ஷா எதிர்ப்பாளர்கள் அவருக்கு நோய் ஏற்பட்டு விட்டதாக உறுதி செய்யப்படாத…

மேலும்...

சாலையில் கேட்பாடற்று கிடந்த பணம் – எடுக்க அச்சப்பட்டு போலீசுக்கு தகவல்!

சென்னை (26 ஏப் 2020): சாலையில் கேட்பாடற்று கிடந்த ரூபாய் நோட்டுகள் கொரோனாவை பரப்ப வீசப்பட்டதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொருக்குப்பேட்டை சாலையில், நான்கு 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு 50 ரூபாய் நோட்டும் கிடந்தது. இந்த ரூபாய் நோட்டுகளை புகைப்படம் எடுத்து, இது கொரோனா தொற்று பரப்புவதற்காக அப்பகுதியில் வீசப்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.கே நகர் போலீசார் ரூபாய் நோட்டுகள் இருக்கும் இடத்திற்கு…

மேலும்...

யாரும் நம்பாதீங்க – பிரதமர் மோடி அறிவிப்பு!

புதுடெல்லி (07 மார்ச் 2020): கொரோனா வைரஸ் குறித்த வதந்திகள் எதனையும் நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி ‘ஜன் ஆஷாதி யோஜனா’ பயனாளிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் சனிக்கிழமை பேசினார். அப்போது அவர், ‘கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும். கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படாமல்…

மேலும்...

ரூ 2000 ரூபாய் செல்லாது என்ற தகவல் வதந்தியே – ரிசர்வ் வங்கி தகவல்!

புதுடெல்லி (23 பிப் 2020): ரூ 2000 ரூபாய் செல்லாது என்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இந்தியன் வங்கி ஏடிஎம்-ல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் வைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படலாம் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே 2000 ரூபாய் நோட்டின் பயன்பாடு படிப்படியாக குறைக்கப்படலாம் என்ற தகவலும் உண்டு. இதனால் மக்கள்…

மேலும்...

கொரோனா வதந்திகளும் அச்சங்களும் – அறிந்து கொள்ள வேண்டியது என்ன?

கொரோனா வைரஸ் பற்றிய அச்சங்களும் வதந்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. கொரோனா வைரஸ் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசிய தகவல்களை, இங்கு கேள்வி – பதிலாகத் தருகிறார் பொதுநல மருத்துவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லா. கொரோனா வைரஸ், சீனா உருவாக்கிய உயிரியல் ஆயுதமா? டாக்டர் ஃபரூக் அப்துல்லா இல்லை. சீனாவின் வூஹான் நகரத்தில் வைராலஜி ஆய்வகம் உள்ளது. இந்த வைரஸும் வூஹான் நகர உயிரினச் சந்தையிலிருந்து பரவியதாகக் கூறப்பட்டவுடன், இரண்டுக்கும் இடையே முடிச்சு போட்டுவிட்டார்கள். கொரோனாவும் சளி,…

மேலும்...

கொரோனா வைரஸ் குறித்து சீனாவிலிருந்து வந்த தமிழக வாலிபர் கூறுவது இதுதான்!

சென்னை (31 ஜன 2020): உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஒருபுறமிருக்க அதுகுறித்த வதந்திகளும் பரவி வருகின்றன. சமீபத்தில் சீனாவிலிருந்து தமிழகம் திரும்பிய 78 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என அவர்களை தனிக் கட்டுப்பாட்டில் வைத்து கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஈடன் கார்டன் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்ற மாணவர் சீனாவில் செஜியாங்க் நகரில் உள்ள நிங்போ பல்கலைகழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம்…

மேலும்...