ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு – ஒப்புக்கொண்ட ரஷ்யா!

மாஸ்கோ (28 பிப் 2022): உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷ்யா- உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. போரால் உக்ரைன் நாட்டு மக்கள் 150க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், இரு தரப்பிற்கும் இடையே நடந்துவரும் மோதலில் 4,300 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்திருந்தது. உக்ரைன் தெரிவித்த இந்தப் பலி எண்ணிக்கை குறித்து ரஷ்யா…

மேலும்...

உணவு, குடிநீர் கிடைக்கவில்லை – உக்ரைனிலிருந்து வந்த தமிழக மாணவர் தகவல்!

தேனி (26 பிப் 2022): உக்ரைனில் மாணவர்களுக்கு குடிநீரோ உணவோ கிடைப்பது இல்லை என்று உக்ரைனிலிருந்து தமிழகம் வந்துள்ள தேனீ மாணவர் தெரிவித்துள்ளார். உக்ரைனைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவ வீரர்கள் போர் தொடுத்து வருகின்றனர். பதற்றமான சூழலுக்கு நடவே தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளனர். இந்நிலையில் போர் துவங்குவதற்கு சற்று முன்பு உக்ரைனிலிருந்து தமிழகம் வந்துள்ள தேனி மாணவர் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள தகவலில் “உக்ரைன் கீவ் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில்…

மேலும்...

ரஷ்யாவுக்கு எதிராக உலகெங்கும் வலுக்கும் போராட்டம்!

அர்ஜென்டினா (26 பிப் 2022): உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை கண்டித்து உலக அளவில் போராட்டம் வெடித்துள்ளது. அர்ஜென்டினாவில் அதிக அளவிலான உக்ரைனிய மக்கள் வாழும் நிலையில், தங்கள் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை கண்டித்து தலைநகர் பியூனஸ் அயர்சில் உள்ள ரஷ்ய தூதரகம் நோக்கி நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக சென்றனர். ரஷ்யாவை கண்டித்தும், போரை நிறுத்துமாறும் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் ஏந்திச்சென்றனர். உக்ரைனில் உள்ள தங்கள் உறவினர்களின் நிலை குறித்து போராட்டக்காரர்கள் கவலை தெரிவித்தனர்….

மேலும்...

பாதியிலேயே திரும்பிய இந்தியர்களை மீட்கச்சென்ற விமானம்!

புதுடெல்லி (24 பிப் 2022): உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ- 1947நடுவானில் பாதி வழியிலேயே இந்தியா திரும்பி உள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. மேலும் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷிய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். உக்ரைன் விமான நிலையங்கள்…

மேலும்...

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் – முக்கிய நகரங்கள் மீது குண்டு மழை!

மாஸ்கோ (24 பிப் 2022): உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்கி வருவதாக கூறப்படுகிறது. உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அதிபர்…

மேலும்...

ரஷ்யாவில் பயணிகள் விமானம் மாயம்!

மாஸ்கோ (06 ஜூலை 2021): : ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று மாயமாகியுள்ளது கிழக்கு ரஷ்யாவில் இருந்து 28 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் விமானம், காம்சட்கா பெனின்சுலா என்ற பகுதி அருகே சென்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது விமானத்தைத் தரையிறக்குவது தொடர்பான கட்டளைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென விமானம் மாயமாகி உள்ளது. இதனை அடுத்து விமானத்தைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மேலும்...

கொரோனா தடுப்பூசியை முதலில் கண்டுபிடித்த நாட்டுக்கே ஆபத்து!

மாஸ்கோ (04 ஜூலை 2021): உலகில் கொரோனா தடுப்பூசியை முதலில் கண்டுபிடித்த நாடு ரஷ்யா. ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி ‘ஸ்புட்னிக்’ பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா தொற்று மீண்டும் ருத்ர தாண்டவம் ஆடுகிறது. இன்று மட்டும் 25,142 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் இது அதிகபட்ச பாதிப்பு மேலும் ஒரே நாளில் 663 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகரித்து வருவது குறிப்பிடத்…

மேலும்...

கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பு – ராணுவ வீரர்களுக்கு முதல்கட்ட சோதனை!

மாஸ்கோ (03 ஜூன் 2020): ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டுள்ளதாகவும், அதற்கான ஆரம்ப கட்ட சோதனை முறையாக ராணுவ வீரர்களுக்கு அந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் அதற்கு முதலில் தடுப்பூசி கண்டுபிடித்தாக வேண்டும். அதற்கான ஆராய்ச்சியில் உலக விஞ்ஞானிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடும் போட்டியும் நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி ஆரம்ப கட்ட…

மேலும்...

கொரோனா :அமெரிக்கா, ஐரோப்பாவை தொடர்ந்து அடுத்த டார்கெட் ரஷ்யா!

மாஸ்கோ (07 மே 2020): ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,599 பேருக்கு கொரோனா இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸை தடுக்க உல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ரஷ்யாவிலும் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இதனால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 10 வது இடத்தில் இருந்து 8 வது இடத்திற்கு சென்றது. இந்நிலையில்மாஸ்கோவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,599 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது….

மேலும்...

ஒரே மாதத்தில் நிலைமை தலைகீழான ரஷ்யா!

மாஸ்கோ (04 மே 2020): ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 10,633 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலககை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் முதல் 10 நாடுகளில் ரஷ்யாவும் உள்ளது. ஆனால் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக குறைவான எண்ணிக்கையில் கொண்ட 2-வது நாடாக ரஷ்யா இருந்தது. ஒரே மாதத்தில் அங்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தற்போது ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில்…

மேலும்...