சவூதி விமான நிலையங்களில் பெண் டாக்சி ஓட்டுநர்கள் நியமனம்!

ரியாத் (09 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் உள்ள நான்கு விமான நிலையங்களில் பெண் டாக்சி ஓட்டுனர்களை நியமிக்கவும், பெண்களுக்காக சிறப்பு பாதை அமைக்கவும் போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக ரியாத், ஜித்தா, தம்மாம் மற்றும் மதீனா விமான நிலையங்களில் பெண் ஓட்டுனர்களின் சேவை புரிவர். இரண்டாவது கட்டத்தில், இந்தத் திட்டம் சவூதியில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இது தொடர்பாக விமான நிலைய டாக்ஸி நிறுவனங்களுடன் போக்குவரத்து ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது…

மேலும்...

சவூதி உள்ளிட்ட அரபு நாடுகளில் கனமழை எச்சரிக்கை!

ரியாத் (16 ஜன 2023): சவூதி அரேபியாவில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திங்கள்கிழமை பிற்பகல் ரியாத் மற்றும் அல்-காசிசீமில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்கா, தபூக் மற்றும் மதீனாவில் லேசான மழை பெய்யும். கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் காலை ஒன்பது மணி வரை பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம்…

மேலும்...

இந்தியா – சவுதி வர்த்தகம் அதிகரிப்பு!

ரியாத் (27 டிச 2022): இந்தியா – சவுதி வர்த்தகம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் 67 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை சவுதி அரேபியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளாக கருதப்படுகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் இறுதி வரையிலான பத்து மாதங்களில் சவூதி-இந்திய வர்த்தகம் 16,820 கோடி ரியாலாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு இதே…

மேலும்...

சவூதி சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை!

ரியாத் (13 டிச 2022): குளிர்காலம் கடுமையாக இருப்பதால் சவுதி சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களை விட இம்முறை சவூதியில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் அதிகரிக்கும் எனவும் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அல் அப்துல் அலி கூறினார். தடுப்பூசி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் எடுக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு வானிலை தொடர்பான நோய்களின்…

மேலும்...

சவூதி விசிட் விசாவை குடியிருப்பு விசாவாக மாற்ற முடியுமா? – பாஸ்போர்ட், இக்காமா அலுவலகம் விளக்கம்!

ரியாத் (12 செப் 2022): சவுதி அரேபியாவிற்கு விசிட் விசாவில் வந்து தங்கியிருப்பவர்கள் அவர்களது குடியிருப்பு விசாவை மாற்ற முடியாது என்று சவுதி பாஸ்போர்ட் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. விசிட் விசாவில் வருபவர்கள் குடியிருப்பு விசாவிற்கு மாறலாம் என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தியை பாஸ்போர்ட் அலுவலகம் மறுத்துள்ளது. சவூதியில் அத்தகைய அமைப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. அவ்வாறு விசாவை மாற்ற உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் குவிந்துள்ளன. இது முற்றிலும் தவறானது என்றும், இதுபோன்ற…

மேலும்...

சவுதியில் 15000 வெளிநாட்டினர் கைது!

ரியாத் (12 செப் 2022): சவுதி அரேபியாவில் கடந்த ஒரு வாரத்தில் சட்டத்தை மீறியவர்கள் 15,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடியுரிமை அனுமதி காலாவதியானவர்கள், சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்தவர்கள், தொழிலாளர் சட்டங்களை மீறியவர்கள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டத்தை மீறுபவர்களைக் கண்டறியும் விசாரணை நாடு முழுவதும் வலுவாகத் தொடர்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் கைது செய்யப்படுகின்றனர். உள்துறை அமைச்சகத்தின் கீழ், பல்வேறு துறைகள் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில்…

மேலும்...

சவூதிக்கு பணிபுரிய செல்பவர்களுக்கு இந்திய காவல்துறை கிளியரன்ஸ் அவசியம்!

ஜித்தா (12 ஜூலை 2022): : சவூதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் அனைத்து இந்தியர்களும் சவுதி இந்தியாவின் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழை (பிசிசி) சமர்ப்பிக்க வேண்டும். மும்பையில் உள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகம், எந்தவொரு வேலைவாய்ப்பு விசா ஒப்புதலுக்கும் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ்களை வழங்குமாறு பயண முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய விதி ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கட்டாய பிசிசி விதிமுறை ஏற்கனவே டெல்லியில் உள்ள சவுதி அரேபிய…

மேலும்...

பக்ரீத் பண்டிகை ஜூலை 9 ஆம் தேதி கொண்டாடப்படும் – சவுதி அரேபியா அறிவிப்பு!

ரியாத் (30 ஜூன் 2022): சவூதி அரேபியாவில் புதன் கிழமை மாலை துல் ஹஜ் பிறை தென்பட்டதை அடுத்து, ஜூன் 29, வியாழன் அன்று இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் பிறை 1 என்றும் மற்றும் பக்ரீத் பண்டிகை ஜூலை 9 சனிக்கிழமை அன்று கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூலை 8, வெள்ளிக்கிழமை அன்று ஹஜ்ஜின் மிக முக்கிய தினமான அரஃபா தினம் ஆகும். இதனை அடுத்து இஸ்லாமிய நாடுகளிலும் ஜூலை 9 அன்று பக்ரீத்…

மேலும்...

வெளிநாட்டு ஹஜ் உம்ரா யத்ரீர்கர்களுக்கு மேலும் புதிய வசதி ஏற்பாடு!

ஜித்தா (18 நவ 2021): வெளிநாட்டில் இருந்து நேரடியாக உம்ரா யாத்திரைக்கான அனுமதி பெற்றவர்கள் பேருந்து சேவையையும் தவக்கல்னா என்கிற அப்ளிகேஷன் மூலம் பதிவு செய்யலாம். இந்த வசதி ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளதை சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது. புதிய சேவைகள் வெளிநாட்டிலிருந்து மக்கா மற்றும் மதீனாவுக்கு வரும் யாத்ரீகர்கள். பயன்பாட்டில் உள்ள தவக்கல்னா ஆப்பில் ஹஜ் உம்ரா சேவையில் அனுமதி வழங்கல் ஐகானைக் கிளிக் செய்தால் போதும். இதில் இருந்து எந்த பெர்மிட்கள் எடுக்க…

மேலும்...

சவூதி ஜித்தாவில் இடிக்கப்படும் கட்டிடங்கள் – வீட்டு வாடகை உயரும் அபாயம்!

ஜித்தா (13 நவ 2021): சவூதி அரேபியாவின் ஜித்தாவில் பல பழைய புதிய கட்டிடங்கள் பெருமளவில் இடிக்கப்படுகின்றன. குறிப்பாக இந்திய மக்கள் அதிகம் வசிக்கும் ஷராஃபியா மற்றும் பாக்தாதியாவில் பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள், பழைய கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன. சவூதி அரேபியாவில் ஜூலை 1 ஆம் தேதி செயல்படுத்தப்பட்ட சவுதி கட்டிடக் குறியீடு திட்டத்தின் அடிப்படையில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.. இடிக்கப்படும் கட்டிடங்கள் மூன்று கட்ட எச்சரிக்கைக்குப் பிறகு இடிக்கப்பட்டு வருகிறது….

மேலும்...