சவுதியில் இறந்த தமிழரின் உடல் IWF உதவியுடன் தமிழகத்திற்கு அனுப்பி வைப்பு!

ரியாத் (08 அக் 2021): சவூதியில் ரியாத்தில் இறந்த சண்முகம் அவர்களின் உடலை தயாகம் அனுப்பிய இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம். விமான நிலையம் வந்த உடலை கோவை தமுமுக மமக உதவியால் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சவுதி அரேபியா ரியாத் நியூசெனையா பகுதியில் பணிபுரிந்து வந்த கோவை குறிச்சி சுந்தராபுரம் காந்திஜி தெருவை சேர்ந்த பரமசிவம் அவர்களுடைய மகன் சண்முகம் (வயது 49) என்பவர் கடந்த 28-09−2021 செவ்வாய்க்கிழமை அன்று மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். .அவருடன் பணிபுரிந்த,…

மேலும்...

மூன்றவது டோஸ் கொரோனா தடுப்பூசி அவசியமா? – சுகாதாரத்துறை விளக்கம்!

ரியாத் (25 ஜூலை 2021): தற்போதைய சூழ்நிலையில், கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகள் போதுமானதாக இருக்கும் என்று சவுதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆய்வின்படி, மூன்றாவது டோஸ் இப்போது தேவையில்லை, பின்னர் எதிர்காலத்தில் இதுகுறித்த அவசியம் குறித்து அறிவிக்கப்படும். இருப்பினும், வைரஸ் பரவாமல் தடுக்க ஒரு டோஸ் போதாது. தற்போது, ​​10,829 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 1530 பேர் ரியாத்தில் சிகிச்சை பெறுகின்றனர். ஜிதாவில் 653 பேர் , மக்காவில், 540 பேர் தம்மாமில் 519…

மேலும்...

சவூதியில் கோவிட் (தவக்கல்னா) செயலியில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது!

ரியாத் (16 ஜூலை 2021):கோவிட் குறித்து தனிநபர்களின் சுகாதார நிலையை தெளிவுபடுத்துவது குறித்த தவக்கல்னா செயலியில் முறைகேட்டில் ஈடுபட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டின 122 பேரை சவூதி போலீசார் கைது செய்துள்ளனர் சவூதியில் தனி நபர் குறித்த அனைத்து நடைமுறைகளும் தவக்கல்னா என்ற செயலியில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதில் கோவிட் 19 குறித்த தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். இநிலையில் இந்த செயலியில் பணம் பெற்றுக்கொண்டு தனி நபர் சுகாதார நிலையை மாற்றம் செய்து சிலர் முறைகேட்டில் ஈடுபட்டது…

மேலும்...

சவூதி சிறையில் உள்ள இந்திய கைதிகளை இந்தியாவிற்கு அனுப்ப உத்தரவு!

தம்மாம் (15 ஜூலை 2021): சவூதி சிறையில் உள்ள 100 க்கும் மேற்பட்ட இந்திய கைதிகளை இந்தியாவிற்கு அனுப்ப அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான தம்மம், கதிஃப் மற்றும் அல் கோபர் சிறைகளில் பல குற்ற வழக்குகளில் அடைக்கப்பட்டுள்ள 100 க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அடைப்படையில் இந்தியாவிற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் பலரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை, எனவே சிறையில் உள்ளவர்களின் தங்கள் தகவல்களை சேகரித்து தூதரகத்தில் சமர்ப்பித்து…

மேலும்...

சவூதி அரேபியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு ஒப்புதல்!

ரியாத் (10 ஜூலை 2021): சவூதி அரேபியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு உணவு மற்றும் மருந்து ஆணையம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஃபைசர்-பயோன்டெக், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி, மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாடர்னா தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 10, 2021 வரை சவுதியில் மொத்தம் 19,262,679 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில், சவூதி அரேபியா ஒவ்வொரு நாளும் சராசரியாக 166,826 கொரோனா…

மேலும்...

கோவிட் காலத்தில் சவுதிக்கு செல்ல முயலும் இந்தியர்களை சிக்கலில் சிக்க வைக்கும் முகவர்கள்!

புதுடெல்லி (04 ஜூலை 2021): விமான தடை காரணமாக சவுதிக்கு செல்ல முடியாத இந்தியர்களை பயண முகவர்கள் சிலர் சிக்கலில் சிக்க வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா சவுதி அரேபியா இடையேயான விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்ப கட்டத்தில், துபாய், மஸ்கட்,பஹ்ரைன் வழியாக சிக்கலின்றி சிலர் சவூதி சென்றனர் . ஆனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால் இவற்றின் பாதை மூடப்பட்டது. இதனால் இந்தியர்கள் சவுதிக்கு பயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது….

மேலும்...