கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை கன்னியாகுமரி ராமநாதபுரம்…

மேலும்...

மாணவர்கள் பழைய பாஸை பயன்படுத்த போக்குவரத்துத்துறை அனுமதி!

சென்னை (25 அக் 2021): மாணவர்கள் பழைய பாஸை பயன்படுத்த போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்கள் பழைய அடையாள அட்டையைக் காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அது இல்லையென்றால் பள்ளிச்சீருடை , பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

மேலும்...

பள்ளிகளில் குழந்தைகளுடன் அமர பெற்றோருக்கும் அனுமதி!

திருச்சி(09 அக் 2021) : ”ஒன்றாம் வகுப்பு மாணவர்களுடன், வகுப்பறையில் பெற்றோர் அமர அனுமதி அளிக்கப்படும்,” என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நேற்று முன்தினம் இரவு, உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் மகேஷ் தெரிவிக்கையில், “நவம்பர்1 முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிக்கு வரும் மாணவ – மாணவியரின் பெற்றோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள, கூடுதல் கவனத்துடன் விழிப்புணர்வு…

மேலும்...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சவூதியில் பள்ளிக்கூடங்களை திறக்க அனுமதி!

ரியாத் (08 ஆக 2021): புதிய கல்வி ஆண்டில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பதாக சவுதி கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவில் பள்ளிகளை மீண்டும் திறக்க அமைச்சகம் தயாராகி வருகிறது. கோவிட் 19 பரவல் காரணமாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் தற்போது புதிய கல்வியாண்டில் பள்ளிகளை திறக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பள்ளிகளில் காலை கூட்டங்கள் மற்றும் விளையாட்டு…

மேலும்...

மதரசாக்களை மூடும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

கவுகாத்தி (20 டிச 2020): அரசு உதவி பெறும் மதரஸாக்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூடுவதற்கான அசாம் அரசின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநில சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சந்திர மோகன் தெரிவித்தார். மதரஸாக்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகள் மூடுவது தொடர்பான அசாம் அரசின் முடிவிற்கு அசாமில் கடுமையான எதிர்ப்பு எழும்பியுள்ளது. . மேலும் இது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் . மாநிலத்தில்…

மேலும்...

ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை!

புதுடெல்லி (07 ஜூன் 2020): நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறப்பது குறித்து ஆலோசிக்‍கப்பட்டு வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்‍கப்பட்டது. தற்போது 5-ம் கட்டமாக வரும் 30-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்‍கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்‍கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்துடன்…

மேலும்...

மாணவனின் மதம் என்ன என்று கேட்ட பள்ளி நிர்வாகம் மீது மாணவனின் தந்தை ஆவேசம்!

திருவனந்தபுரம் (22 பிப் 2020): கேரளாவில் பள்ளியில் சேர்க்கச் சென்ற மகனின் மதம் என்ன என்று கேட்டதால் பள்ளி நிர்வாகம் மீது ஆவேசம் அடைந்தார் நசீம் என்பவர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நசீம். இவரது மனைவி தன்யா. இந்த தம்பதியின் மகனை 1-ம் வகுப்பில் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல் நிலைப்பள்ளியில் சேர்க்க முடிவு செய்தனர். அந்த பள்ளியின் விண்ணப்பத்தை அவர் நிரப்பியபோது அதில் மதம் என்று இருந்த இடத்தில் மதத்தின் பெயரை குறிப்பிட…

மேலும்...

ஆண்டுவிழா நாடகம் போட்ட பள்ளிக்கூடம் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது!

பெங்களூரு (29 ஜன 2020): பள்ளி ஆண்டு விழாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நகைச்சுவை நாடகம் போட்ட பள்ளி நிர்வாகம் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஷஹீன் பள்ளியில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற ஆண்டுவிழாவின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சியாக 4 ஆம் வகுப்பு மாணவர்கள் நகைச்சுவை நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். அந்த நாடகத்தில் குடியுரிமை சட்டத்தை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அரசின் சட்டத்தை அவமதிக்கும் விதமாக இருப்பதாக…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களை தவறாக வழிநடத்தும் பள்ளி!

அஹமதாபாத் (09 ஜன 2020): குஜராத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும் என மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அஹமதாபாத் லிட்டில் ஸ்டார் பள்ளியில் 6 முதல் 10 வகுப்பு மாணவர்கள் போஸ்ட் கார்டில் பிரதமருக்கு குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கடிதம் எழுத கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களிடமும் போஸ்ட் கார்டை கொடுத்து அவர்கள் போர்டில் எழுதும் வாக்கியத்தை மாணவர்கள் அனைவரும் எழுத வேண்டும் என்றும் இது பயிற்சிதான் என்பதாகவும் பொய்யான வகையில் மாணவர்களை…

மேலும்...