ஆளுநர் மீது கருப்புக்கொடி வீசியது உண்மையா? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

சென்னை (20 ஏப் 2022): ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கருப்புக் கொடிகள் வீசியதாக கூறப்படும் நிலையில் இதற்கு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க ஆளுநர் ஆர்.என் ரவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்றைய தினம் மயிலாடுதுறை சென்றிருந்தார். ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ், விசிக, திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது ஆளுநரின் கான்வாய்…

மேலும்...

நள்ளிரவில் பாஜக தலைவர் கைது!

சென்னை (08 ஏப் 2022): நள்ளிரவில் பாஜக மாவட்ட பிரசார அணி தலைவர் ஜெயபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரல்வாய்மொழியில் கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற பாரதிய ஜனதா நிறுவப்பட்ட தின விழாவில் கட்சியின் மாவட்ட பிரசார அணி தலைவர் ஜெயபிரகாஷ் பேசினார். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக திமுகவினர் அளித்த புகாரில் ஜெயப்பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு இரண்டரை மணியளவில் ஜெயப்பிரகாஷை கைது செய்ய இரணியலில் உள்ள அவரது…

மேலும்...

முதல்வர் ஸ்டாலினுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கிய பிஎம்டபிள்யூ கார்!

துபாய் (25 மார்ச் 2022): தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு பிஎம்டபிள்யூ கார் வழங்கியுள்ளது. 4 நாள் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தனி விமானம் மூலம் நேற்று சென்று அடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி. இந்த உலகக் கண்காட்சி, துபாய்…

மேலும்...

ஒன்றிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னை (12 மார்ச் 2022): உக்ரைனில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்கு ஒன்றிய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் கடைசி குழுவினரை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் வரவேற்றார். இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட ஒன்றிய அரசுக்கும், வெளியுறவுத் துறை அமைச்சருக்கும்…

மேலும்...

சட்டத்திற்கு விரோதமான செயலை தடுத்தேன் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை (12 மார்ச் 2022): ஜாமினில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜெயக்குமார்…

மேலும்...

என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் – ஸ்டாலின் மீது ஓபிஎஸ் பாய்ச்சல்!

சென்னை (17 பிப் 2022): “ஜல்லிக்கட்டு விவகாரத்தில் என் மீது முதல்வர் ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காணொலிக் காட்சி வாயிலாக மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு குறித்து பேசி இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட காரணமாக இருந்த கட்சி மத்திய காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த தி.மு.க….

மேலும்...

மேற்கு வாங்க சட்டசபை முடக்கம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை (13 பிப் 2022): மேற்கு வங்க சட்டமன்றத்தை முடக்கிய ஆளுநரின் செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்குள்ள ஆளுநர் ஜக்தீப் தன்கர்ம்க்கும் , முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.’எனக்கு எந்த மரியாதையும் கொடுப்பதில்லை; நான் கேட்கும் கேள்விகள், விளக்கங்களுக்கு பதில் அளிப்பதில்லை’ என, மாநில அரசு மீது, கவர்னர் குற்றஞ்சாட்டுகிறார் ஆளுநர் .மாநில அரசோ, ‘சட்டசபையில்…

மேலும்...

ரோஜா முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு!

சென்னை (07 பிப் 2022): ஆந்திர மாநில எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா இன்று காலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, ஆந்திர மாநிலம் மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் சாலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சருடன் பேசியதாகத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஆந்திர மாநிலத்தில் நான் எம்எல்ஏவாக இருக்கும் நகரி தொகுதியானது தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அவர்கள் மருத்துவ உதவிகளுக்காகச் சென்னைக்குத்தான் அதிகம் வருகிறார்கள். அவ்வாறு…

மேலும்...

ஆளுநர் தனது கடமையை செய்ய தவறிவிட்டார் – முதல்வர் ஸ்டாலின்!

சென்னை (05 பிப் 2022): தமிழக ஆளுநர் அரசியலமைப்பு விதிப்படி தனது கடமையை செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோரும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் துவங்கியது. இதில் 10 கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை…

மேலும்...

கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை – ஸ்டாலின்!

சென்னை (30 ஜன 2022): கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியா முழுவதுமுள்ள காந்தி நினைவிடங்களில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் காந்திக்கு மரியாதை செய்துள்ளார். சென்னை மெரினாவிலுள்ள காந்தி சிலையில், காந்தி உருவப்படம் வைத்து அதற்கு முதல்வர் ஸ்டாலினுடன்…

மேலும்...