தமிழகத்திற்கு 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் – தடுப்பூசி நிறுவனங்கள் விண்ணப்பிக்க கோரிக்கை!

சென்னை (15 மே 2021): தமிழக அரசு நேரடியாக கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்ய முன்வந்துள்ள நிலையில் தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளியை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கோரியுள்ளது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு போதிய அளவிலான மருந்துகள் இல்லாததால் உலகளாவிய ஒப்பந்த புள்ளிகள் மூலமாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தடுப்பூசி கொள்முதலுக்கு இன்று தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்…

மேலும்...

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (18 ஏப் 2021): கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் வரும் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கு. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அதிக அளவில் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் சில புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆனாலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. இதனால் புதிய கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா கைமீறிவிட்டது – தமிழக அரசு தகவல்!

சென்னை (15 ஏப் 2021): தமிழகத்தில் கொரோனா பரவல் கைமீறிவிட்டதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் எதுவும் உள்ளதா? என்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி விளக்கம் கோரினார். கொரோனாவின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி போதிய இருப்பு உள்ளது என்றும், நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்க சுகாதாரத் துறைச் செயலாளர் தான் சரியான நபர் என்பதால்,…

மேலும்...

தமிழகத்தில் ஒரேநாளில் 3,672 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை (05 ஏப் 2021): தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தநிலையில் தற்போது தமிழத்தில் கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 3,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,03,479 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 பேர் கொரோனா பாதிப்பால்…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பரவல் – தலைமை செயலாளர் பரபரப்பு அறிக்கை!

சென்னை (03 ஏப் 2021): கொரோனா நோய் தொற்று பரவலை கண்காணித்து தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார். “இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் கொரோனாநோய்த் தொற்று அதிகரித்துவரும் சூழல் காணப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இந்த தொற்று அதிவேகமாகவும், பன்மடங்கும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், அதேவேளையில் பஞ்சாப், கர்நாடகா, சதிஷ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், டெல்லி மற்றும் தமிழ்நாட்டிலும் நாள் ஒன்றுக்கு நோய்த் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை…

மேலும்...

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? – தலைமைச் செயலாளர் அவசர ஆலோசனை!

சென்னை (16 மார்ச் 2021): தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு கீழே இருந்தநிலையில், தற்போது 25 ஆயிரத்துக்கு மேல் தாண்டி விட்டது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி புதிதாக கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை 800-க்கும் கீழ் குறையத் தொடங்கியது. தொடர்ந்து குறைந்து வந்த…

மேலும்...

தமிழகத்தில் உவைஸி கட்சி வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு!

சென்னை (15 மார்ச் 2021): தமிழகத்தில் அ ம.மு.க. கூட்டணியில் உள்ள ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இறுதி செய்யப்பட்டு தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி சார்பில் போட்டியிடும் 3 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் வக்கீல் அஹமத், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் முஜிபுர் ரஹ்மான், கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் அமீனுல்லா…

மேலும்...

தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது மகிளா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பரபரப்பு புகார்

சென்னை (12 மார்ச் 2021): தமிழக காங்கிரஸ் கட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு ஒருவருக்கு கூட டெபாசிட் கிடைக்காது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மகிளா தலைவர் ஜான்சிராணி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: “நிலக்கோட்டை தொகுதி மக்களால் பலமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுதி மக்களுக்கு அயராது தொண்டாற்றி, காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக மிளிர்ந்த எனது பாட்டி ஏ.எஸ்.பொன்னம்மாள் அவர்களை சிறு வயது முதல் பார்த்து…

மேலும்...

உடைகிறதா திமுக காங்கிரஸ் கூட்டணி?

சென்னை (03 மார்ச் 2021): தமிழக அரசியல் களம் பரபரப்பான நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என கருத்து கேட்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு குறைவான இடங்களே ஒதுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் ராகுல் காந்தி அதிருப்தியில் உள்ளார். மேலும் க்கள் நீதி மய்யத்துடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவை ராகுலை டென்ஷனாக்கியுள்ளது. மேலும் “கடந்த முறை போட்டியிட்ட 41 தொகுதிகளுக்குக் குறைவாக போட்டியிட…

மேலும்...

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

சென்னை (27 பிப் 2021): தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் உள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 287 ஆண்கள், 194 பெண்கள் என மொத்தம் 481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்தவகையில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று உயருகிறது. அதிகபட்சமாக சென்னையில்…

மேலும்...