மே 7ஆ, தேதி மதுபானக் கடைகள் திறக்கப்படுமா?

சென்னை (05 மே 2020): தமிழகத்தில் வரும் 7-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அன்று கடைகள் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு, மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நிபந்தனைகளுடன் வரும் 7-ம் தேதி முதல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது….

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (04 மே 2020): தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,409 குணமாகி வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இன்று மட்டும் 527 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 266 பேருக்கும் கடலூரில் 122 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில்…

மேலும்...

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி – தமிழகத்தில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

சென்னை (02 மே 2020): தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் புதிதாக 231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 203 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று புதிதாக 231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,757 அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தமிழகத்தில் இன்றுவரை 1,341…

மேலும்...

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து விடுபட்டு வீடு சென்றவர்கள் எத்தனை தெரியுமா?

சென்னை (07 ஏப் 2020): தமிழகத்தில் இதுவரை 19 பேர் குணமாகி வீட்டுக்கு சென்றுள்ளனர். என்று தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று வரை 621 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் சற்று முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “கொரோனா தொற்றில் இருந்து தமிழகத்தில் 19 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை : 5,305. கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல்…

மேலும்...

தமிழகத்தில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

சென்னை (29 மார்ச் 2020): தமிழகத்தில் இதுவரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் 8 பேரும் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதில், 10 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா…

மேலும்...

தமிழக நோயாளிக்கு தண்டு உயிரணுக்களை (Stem Cells) தானமாக வழங்கும் கேரள மாணவி!

சென்னை (27 மார்ச் 2020): தமிழக நோயாளிக்கு தண்டு உயிரணுக்களை தானமாக வழங்க முன்வந்துள்ளார் கேரள மாணவி ஹிபா ஷமார். சென்னை மருத்துவமனையில் தண்டு உயிரணுக்கள் (Stem Cells) பற்றாக்குறையால் உயிருக்கு போராடி வரும் நோயாளி ஒருவருக்கு கேரளாவை சேர்ந்த 18 வயது மாணவி ஹிபா என்பவர் தனது தண்டு உயிரணுக்களை தானமாக வழங்க முன்வந்துள்ளார். ஹிபா கேரள மாநிலம் எர்ணாகுளம் தெரஸா கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். ஷமார், ஜீனத் தம்பதிகளின் மகளான…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

சென்னை (25 மார்ச் 2020): தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் மேலும் புதியதாக 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக வந்த சென்னையைச் சேர்ந்தவர். இவர்கள் 22-ம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு சேலம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிச்சை அளிக்கப்பட்டு…

மேலும்...

கொரோனா வைரஸுக்கு தமிழகத்தில் முதல் மரணம்!

மதுரை (25 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக மதுரையை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் அவர் உயிரிழந்தார். இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சுட்டுரைப் பக்கத்தில் உறுதிபடுத்தினார். வெளிநாடு அல்லது வெளிமாநிலம் சென்று வராமல் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர் ஆவார். இவருக்கு நீரிழிவு,…

மேலும்...

குடும்ப அட்டைகளுக்கு தலா 1000 ரூபாய் – முதல்வர் அறிவிப்பு!

சென்னை (25 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். மேலும், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஏப்ரல் மாதத்துக்கான நியாய விலைக் கடை பொருள்கள் விலையேதும் இல்லாமல் வழங்கப்படும் எனவும் முதல்வா் பழனிசாமி அறிவிப்புச் செய்தாா். இதுகுறித்து, பேரவை விதி 110-ன் கீழ் அவா் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை:- கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தமிழக அரசு தொடா்ந்து…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

சென்னை (22 மார்ச் 2020): தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில் “தமிழகத்தில் புதிதாக இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கலிபோர்னியாவிலிருந்து வந்த 63 வயதுப் பெண் ஸ்டான்லி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். துபையிலிருந்து வந்த 43 வயது ஆண் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இருவரது உடல்நிலையும்…

மேலும்...