தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்வு!

சென்னை (22 மார்ச் 2020): தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 லட்சத்தையும், பலியானோர் எண்ணிக்கை 13,050 யையும் தாண்டியுள்ள நிலையில் இந்தியாவிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள உள்ள நிலவரப்படி நாடு முழுவதும் 341 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 6 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை…

மேலும்...

தமிழகத்தில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை!

சென்னை (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் முழுவதும் உள்ள எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதேபோல் கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள…

மேலும்...

இஸ்லாமிய தலைவர்களுக்கு தலைமை செயலர் அழைப்பு!

சென்னை (13 மார்ச் 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்க இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக தலைமை செயலர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அழைப்பில், “குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பொது மக்களிடையே பல்வேறு ஐயாப்படுகள் உள்ளன. குறிப்பாக சிறுபான்மையினரிடம் இது தொடர்பாக கலந்தாலோசிக்கும் விதமாக வரும் 14 மார்ச் 2020 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், தமிழக தலைமை செயலகம் பழைய கட்டடம் 2 வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் கலந்தாலோசிக்கும்…

மேலும்...

என்பிஆர் தமிழகத்தில் நிறுத்தி வைப்பு – அமைச்சர் உதயகுமார் தகவல்!

சென்னை (13 மார்ச் 2020): மத்திய அரசு இதுவரை தமிழக அரசின் கோரிக்கைக்கு பதிலளிக்காததால் என்பிஆர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரியும், என்பிஆரை பழைய முறையில் அமல்படுத்தவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் என்பிஆர் சட்டத்தை அமல் படுத்துவதில் இஸ்லாமியர்கள் கோரிக்கையைப் பரிசீலிப்போம், 3 கேள்விகள் இருக்காது, மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம் என முதல்வர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதியிருந்தது. நேற்று சட்டப்பேரவையில்…

மேலும்...

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – தமிழக அரசின் அரசிதழில் வெளியீடு!

சென்னை (12 மார்ச் 2020): தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அரசிதழில் கூறப்பட்டுள்ளதாவது: 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த கணக்கெடுப்பின்போது 31 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்களை பதிவு செய்ய வேண்டும். அதில்,…

மேலும்...

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்!

சென்னை (11 மார்ச் 2020): தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் செலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் பாஜக மாநில தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், புதிய பாஜக தலைவர் எல்.முருகனை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார். எல் முருகன் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் பி.எல். படிப்பும்,…

மேலும்...

தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடந்த மற்றும் ஒரு நிகழ்ச்சி!

ஈரோடு (06 மார்ச் 2020): ஈரோடு அருகே மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் மற்றும் ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது. மாவட்டத்தில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் மசூதி முன்பு மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. அதன் அருகே மசூதியும் உள்ளது. அந்த கோயிலில் மார்ச் 1ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று…

மேலும்...

தமிழக பட்ஜெட்டின் (2020) முக்கிய அம்சங்கள்!

சென்னை (14 பிப் 2020): 2020- 21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று வெளியிட்டார். பொருளாதார நெருக்கடிகளை தமிழக அரசு திறமையாக சமாளித்து வருகிறது. கல்வித் துறைக்கு ரூ.34,841 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% ஆக இருக்கும்…

மேலும்...

நகர்புர உள்ளாட்சித் தேர்தல் ஏப்ரலில் நடைபெற வாய்ப்பு!

சென்னை (10 பிப் 2020): நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏப்ரலில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்தலாம் என முதல்வர் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும்...

கொரோனா வைரஸ் குறித்து சீனாவிலிருந்து வந்த தமிழக வாலிபர் கூறுவது இதுதான்!

சென்னை (31 ஜன 2020): உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஒருபுறமிருக்க அதுகுறித்த வதந்திகளும் பரவி வருகின்றன. சமீபத்தில் சீனாவிலிருந்து தமிழகம் திரும்பிய 78 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என அவர்களை தனிக் கட்டுப்பாட்டில் வைத்து கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஈடன் கார்டன் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்ற மாணவர் சீனாவில் செஜியாங்க் நகரில் உள்ள நிங்போ பல்கலைகழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம்…

மேலும்...