சீனாவிலிருந்து வந்த தமிழருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு?

திருவண்ணாமலை (31 ஜன 2020): சீனாவிலிருந்து தமிழகம் வந்த பொறியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் உலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பால் பலியானவா்கள் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த வைரஸ் நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 7, 711 ஆக உயா்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி சீனாவில் இருந்து சென்னை…

மேலும்...

முதலில் அறிக்கை பின்பு மறுப்பு – மீண்டும் தமிழக அரசின் குளறுபடி!

சென்னை (29 ஜன 2020): பொதுத் தேர்வை முன்னிட்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினம் 1 மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட மாட்டாது என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அடிப்படையில் இதுவரை பள்ளிகள் நடைபெற்று வந்தனர். ஆனால் மத்திய அரசு அமைத்திருந்த கஸ்தூரிரங்கன் தலைமையிலான தேசியக் கல்விக்கொள்கை வடிவமைப்புக் குழுவின் வரைவு அறிக்கையும் கடந்த ஆண்டு வெளியானது. அந்த அறிக்கையில் 5 மற்றும்…

மேலும்...

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேலும் அழுத்தம் – சிறப்பு வகுப்புகளுக்கு உத்தரவு!

சென்னை (29 ஜன 2020): பொதுத் தேர்வை முன்னிட்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினம் 1 மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அடிப்படையில் இதுவரை பள்ளிகள் நடைபெற்று வந்தனர். ஆனால் மத்திய அரசு அமைத்திருந்த கஸ்தூரிரங்கன் தலைமையிலான தேசியக் கல்விக்கொள்கை வடிவமைப்புக் குழுவின் வரைவு அறிக்கையும் கடந்த ஆண்டு வெளியானது. அந்த அறிக்கையில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு…

மேலும்...

குரூப் 4 தேர்வு ரத்தாகுமா? – தொடரும் கைது!

சென்னை (28 ஜன 2020): குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு எழுதிய சிவராஜ் உட்பட 2 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக…

மேலும்...

நீட் தேர்வு – தீர்ப்பை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (28 ஜன 2020): நீட் தேர்வை தமிழகத்தில் தடை விதிக்க முடியாதென உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி, வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் திரு. அருண் மிஸ்ரா தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. நீட் தேர்வு கட்டாயம் என்பதை உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவு படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாள்தோறும் மாற்ற முடியாது என…

மேலும்...

தமிழக பெண்களுக்கு தொடரும் அதிர்ச்சி – மருத்துவர்கள் கவலை!

சென்னை (24 ஜன 2020): தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் அளவிற்கு மார்பக புற்றுநோய் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிபுணர் டாக்டர் சாமிநாதன் இதுபற்றி கூறுகையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் அளவிற்கு மார்பக புற்றுநோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அடிக்கடி பரிசோதனை செய்து முன்கூட்டியே கண்டுபிடித்தால் பாதிப்புகளை குறைக்கலாம் என்று அவர் தெரிவித்தார். மேலும் நாட்டிலேயே அதிகமாக உத்தரபிரதேசத்தில் 24, 181 பேருக்கு மார்பக…

மேலும்...

ஆசிரியர் தகுதி தேர்வு – வரும் 27 – 28 தேதிகளில் நடைபெறும்!

சென்னை (22 ஜன 2020): அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு ஜூன் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடக்ஙளுக்கான தேர்வு மே 2 மற்றும் 3ம் தேதி நடைபெற உள்ளதாகவும் டிஆர்பி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பானை கடந்த நவம்பரில் விரிவாக வெளியிட்டுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் 97 காலியிடங்கள் உள்ள வட்டார கல்வி…

மேலும்...

ஒத்தி வைக்கப்பட்ட இடங்களுக்கு வரும் 30 ஆம் தேதி மறைமுக தேர்தல்!

சென்னை (22 ஜன 2020): “ஒத்தி வைக்கப்பட்ட இடங்களுக்கு வரும் 30 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும்!” என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11 ஆம் தேதி நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், 42…

மேலும்...

வயிறு எரியுது – ராமதாஸ் வேதனை!

சென்னை (21 ஜன 2020): பொங்கல் அன்று மது விற்பனை 605 கோடிக்கு விற்பனை நடைபெற்றதை நினைத்து தனது “வயிறு எரிவதாக” பாமக தலைவர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இதுவரை இல்லாத அளவுக்கு பொங்கல் திருநாளில் ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரியும். அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி பசியால் எரியும்….

மேலும்...

மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பால் விலை உயர்வு!

சென்னை (20 ஜன 2020): தனியார் பால் நிறுவனங்கள் நாளை முதல் பால் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளனர். பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணங்களால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தனியார் பால் கொள்முதல் மற்றும் விற்பனை நிறுவனங்கள் அறிவித்துள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தினாலும் தங்களுக்கு அதில் லாபம் எதுவும் கிடைப்பதில்லை என மாட்டு உரிமையாளர்கள் மற்றும் சில்லரை பால் விற்பன்னர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பால் விலை உயர்வோடு தனியார் பால்…

மேலும்...