தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் – கலக்கத்தில் பெரிய தலைகள்!

சென்னை (01 டிச 2022): சமீபத்திய நிகழ்வுகளால் தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் திருச்சி சூர்யா சிவா, சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுடன் பேசிய போன் உரையால் ஆடியோ கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. டெய்சியை ஆபாசமான வார்த்தைகளால் அர்ச்சித்த சூர்யா, பதவிக்கு வந்தது எப்படி என கேசவ விநாயகத்தையும் தொடர்பு படுத்தி ஆபாசமாகப் பேசினார். இதனைத்…

மேலும்...

தமிழகத்தில் சுழற்றி எடுக்கவுள்ள காற்றும் மழையும்!

சென்னை (01 டிச 2022): தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் அந்தமான் அருகே டிசம்பர் 5ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இன்றைய தினம் தமிழகம், புதுச்சேரிக்கு நல்ல மழை இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.. மேலும் அரபிக்…

மேலும்...

தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை (19 நவ 2022): தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,” தென்கிழக்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்பொழுது வலு பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து…

மேலும்...

தமிழக ஆளுநரை திரும்பப்பெறக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனு!

புதுடெல்லி (09 நவ 2022): தமிழக ஆளுநராக இருந்து வந்த பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட உடனேயே திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தும்…

மேலும்...

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தீவிரமாக இருக்கும் – வெதர்மேன் எச்சரிக்கை!

சென்னை (08 நவ 2022): தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தீவிரமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 9ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு இசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து…

மேலும்...
RSS

ஆர் .எஸ்.எஸ் பேரணி – மேல் முறையீடு செய்ய முடிவு!

சென்னை (05 நவ 2022): நாளை தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் நிபந்தனை உடன் அனுமதி வழங்கியிருந்த நிலையில், உயர்நீதிமன்ற நிபந்தனை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும்...

கோடியக்கரை அருகே மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – இந்திய கடற்படை மீது குற்றச்சாட்டு!

காரைக்கால் (21 அக் 2022): கோடியக்கரை அருகே மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தத்போது, ஹெலிகாப்டரில் வந்த கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் மயிலாடுதுறை மீனவர் வீரவேல் காயமடைந்துள்ளார். தற்போது அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காயமடைந்த 9 மீனவர்கள் கடற்படை முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியது இந்திய…

மேலும்...

பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீடுகளில் தொடரும் பெட்ரோல் குண்டுவீச்சு!

கோவை (25 செப் 2022): தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில், நேற்று முன்தினம் பா.ஜ. க, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் வீடு, வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி, தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு காரணமாக கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 4,000க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஈரோடு, திண்டுக்கல், ராமநாதபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும், நேற்று இரண்டாவது நாளாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. இதன்…

மேலும்...

அண்ணாமலை தலைமைக்கு ஆபத்து – தமிழக பாஜகவில் மாற்றம்!

சென்னை (07 செப் 2022): பாஜகவில் அண்ணாமலை செயல்படும் விதம் பாஜகவினருக்கே பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரைவில் தமிழக தலைமையில் மற்றம் வரலாம் என தெரிகிறது. ஏற்கனவே அண்ணாமலையின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருக்கும் மூத்த பாஜக தலைவர்கள் தற்போது மேலும் அதிருப்தியில் உள்ளனர். சமீபத்தில் எல்லையில் இறந்த தமிழக ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்துவதற்கு, மதுரை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நிதி அமைச்சர் தியாகராஜன் கார் மீது, பா.ஜ.கவினர் செருப்பு வீசிய சம்பவம்…

மேலும்...

பஜகவிலிருந்து விலகுவதாக தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு!

மதுரை (14 ஆக2022): பா.ஜ.,கவின் மத அரசியல் மற்றும் வெறுப்பு அரசியல் பிடிக்காமல் தொடர்ச்சியாக ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக பா.ஜ.க,வில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்.எல்.ஏ., வும் மதுரை மாவட்ட பா.ஜ.க தலைவருமான சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் ராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவம் குறித்து தூக்கம் வராத காரணத்தால் நள்ளிரவில் அமைச்சரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தேன். பா.ஜ.கவின் மத அரசியல் மற்றும் வெறுப்பு…

மேலும்...