பிஞ்சு மனதில் சாதி வெறி – பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதலில் ஒரு மாணவர் பலி!

திருநெல்வேலி (30 ஏப் 2022): நெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை அடுத்துள்ள பள்ளக்கால் புதுக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த சில வாரமாக +2 மாணவர்கள், தங்கள் சமூகத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் சாதிக்கயிறு கட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. +2 மாணவர்கள் சிலர், இந்த விவகாரத்தில் ஒருவரை ஒருவர்…

மேலும்...

மாரிதாஸுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செக்!

புதுடெல்லி (29 ஏப் 2022): பிரபல யூடூபர் மாரிதாசுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது தமிழகம் காஷ்மீர் ஆக மாறி வருகிறது என மாரிதாஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அதுமட்டுமல்லாமல் மாரிதாஸ் மீது பல அவதூறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்த விசாரணையில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் ரத்து செய்தார். மாரிதாஸ் செய்த…

மேலும்...

தமிழகத்தில் பள்ளியில் ஹிஜாப் தடையா? – பெற்றோர் காவல்துறையில் புகார்!

சென்னை (23 ஏப் 2022): சென்னை தாம்பரம் சங்கர வித்தியலாய பள்ளியில் பெற்றோர் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர தடை விதிக்கப் பட்டதை அடுத்து பெற்றோர் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தை சேர்ந்த ஆசீக் மீரான் என்பவர் கிழக்கு தாம்பரத்தில் இயங்கிவரும் சங்கர வித்யாலயா பள்ளியில் தனது 4 வயது குழந்தைக்கு LKG வகுப்பு சேர்க்கைக்காக மனைவி, குழந்தையுடன் சென்றிருந்தனர். பள்ளியில் வளாகத்தில் விண்ணப்பம் பெறுவதற்காக அமர்ந்திருந்தபோது, பள்ளியின் அட்மின் மேலாளர் சுந்தரராமன் என்பவர், குழந்தையின்…

மேலும்...

தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்படி வாழ்கிறோம் தெரியுமா? – டெல்லிக்கு பாடம் நடத்திய நவாஸ்கனி!

சென்னை (20 ஏப் 2022): டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி நவாஸ்கனி தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்படி ஒற்றுமையுடன் வாழ்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் முஸ்லிம்கள் தொடர்ந்து இதயமற்ற சங்பரிவார் கூட்டங்களால் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்படுகிறது, இஸ்லாமியர்களின் உடமைகள் தகர்க்கப்படுகிறது, பாதுகாப்பற்ற நிலையில் அங்குள்ள இஸ்லாமியர்கள் தவித்து…

மேலும்...

ஆளுநர் திமுக மோதல் – ஆளுநர் திடீர் டெல்லி பயணம்!

சென்னை (07 ஏப் 2022): தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்கள் ஆளுநர் ரவி முன் நிலுவையில் உள்ளன. இதை வலியுறுத்தி கடந்த 4-ம் தேதி மக்களவையில் `தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை நீக்க வேண்டும்’ என்று திமுக-வினர் கோரிக்கை வைத்திருந்தனர். அதைத்தொடர்ந்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார்…

மேலும்...

இன்று உச்சத்தை தொட்ட பெட்ரோல் டீசல் விலை!

சென்னை (31 மார்ச் 2022): சென்னையில் இன்று (மார்ச் 31) பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, 107 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடித்து வந்த நிலையில், கடந்த 22ம் தேதியில் இருந்து விலை உயரத்தொடங்கியது. ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு விலையேற்றம் காணாமல் இருந்த பெட்ரோல் விலை தேர்தல் முடிந்த பிறகு ஒவ்வொரு நாளும் அதிகரித்தபடி உள்ளது. சென்னையில்…

மேலும்...
Durai Murugan

தமிழக அரசின் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு!

சென்னை (21 மார்ச் 2022): மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவது குறித்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகா மட்டுமல்லாது தமிழகம், கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களுக்கும் பாய்கிறது. கோடிக்கணக்கான மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்த நிலையில் காவிரியின் குறுக்கே ராம்நகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது எனும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட…

மேலும்...

இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் 2021-ம் ஆண்டு 8.70 லட்சம் பேர் மரணம்!

மதுரை (18 பிப் 2022): வரலாற்றில் இதுவரை இல்லாத அலவிற்கு தமிழகத்தில் 2021-ம் ஆண்டு 8.70 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழக மக்கள் தொகை 6 கோடியே 24 லட்சம் ஆகும். இது 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 7 கோடியே 21 லட்சமாக உயர்ந்தது. 2021-ம் ஆண்டு கொரோனா காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற வில்லை. இருந்தாலும், தமிழக மக்கள் தொகை தற்போது 8 கோடியை…

மேலும்...

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் – இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது!

சென்னை (17 பிப் 2022): நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. 218 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம்…

மேலும்...

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளவர்களுக்கு சலுகைகள் கூடாது – தமிழக அரசு!

புதுடெல்லி (09 பிப் 2022): கோவை குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் உள்ளிட்ட எந்த சலுகைகளும் வழங்கக்கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி மூஸா மொய்தீன் உள்ளிட்ட 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அவர் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் உச்சநீதிமன்றத்தில், தாங்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதாகவும், தங்களுக்கு…

மேலும்...