நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு டஃப் கொடுப்போம் – தமிழக அமைச்சர்!

சென்னை (27 ஜூன் 2021): நீட் தேர்வு தாக்கம் குறித்து தமிழக அரசு இயற்றும் தீர்மானம் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்க முடியாத அளவில் இருக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த கால திமுக ஆட்சியில் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நுழைவுத்தேர்வு தடுக்கப்பட்டது. தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராயப்படுகிறது. அக்குழுவின் அறிக்கை…

மேலும்...

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது? – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்!

சென்னை (23 ஜூன் 2021): தமிழகத்தின் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையின் மீதான விவாதம் இன்று தொடங்கியது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ கேள்விக்கு, தமிழகத்தில் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது தான் பெட்ரோல் விலை குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சி…

மேலும்...

தமிழ் நாட்டில் தொடர் மின்வெட்டு – அமைச்சர் செந்தில் பாலாஜி செய்வது இதுதான்!

சென்னை (22 ஜூன் 2021): திமுக அரியணையில் அமர்ந்த ஒரு வாரத்திலேயே மின்வெட்டு புகார்களும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. எல்லாவற்றையும் ஓரளவுக்கு மேனேஜ் செய்து வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு மின்வெட்டு பிரச்னை பெரிய தலைவலியாக உள்ளது. இச்சூழலில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. அப்போது பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களும், தாங்கள் எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டனர். மேலும் குறைகளையும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இந்தத் தீர்மானத்தின் போது பேசிய…

மேலும்...

நீட் தேர்வு விவகாரத்தில் தெளிவில்லாத தமிழக அரசு!

சென்னை (20 ஜூன் 2021): நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அமைச்சர் , வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நிமிடம் வரை நீட் தேர்வு இருக்கத்தான் செய்கிறது என்று கூறினார். எனவே தற்போதைய சூழலில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகத் தான் வேண்டும் எனவும் நாளைய தினமே…

மேலும்...

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள் – முழு விவரம்!

சென்னை (20 ஜூன் 2021): இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஜூன் 28ஆம் தேதி வரை, மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் அனைத்து வகை கடைகள் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 50 சதவீத நபர்களுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள் 50 சதவீதம் பயணிகளுடன் இயங்க அனுமதி…

மேலும்...

தமிழ் நாட்டில் நீட் தேர்வு வாய்ப்பில்லை – கல்வி அமைச்சர் தகவல்!

சென்னை (07 ஜூன் 2021): தமிழ்நாட்டில் நீட் தேர்வு உட்பட எந்த நுழைவு தேர்வும் நடத்தக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், நீட் தேர்வு குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்தார். மேலும் ஆன்லைன்…

மேலும்...

ஊரடங்கு காலத்தில் 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு – நியாய விலை கடைகள் மூலம் வழங்க முதல்வர் உத்தரவு!

சென்னை (28 மே 2021):கொரோன பரவலை கட்டுக்குள் கொண்டு வர முழு ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய…

மேலும்...

தளர்வுகள் இல்லாத ஊரடங்கு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை (22 மே 2021): , தமிழகத்தில் 24 ஆம் தேதி முதல் ஒருவாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. நாட்டிலேயே தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக தமிழகம் தற்போது உள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால், மருத்துவ நிபுணர்களுடன் முதல் அமைச்சர் மு.க…

மேலும்...

கொரோனா தொற்றில் இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கும் தமிழகம்!

சென்னை(19 மே 2021): இந்தியாவில் கொரோனா 2-வது அலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில்தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 10 மாநிலங்களில் 74% புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33,059 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் நேற்று 31,337 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

மருத்துவமனைகளில் கொரோனா படுக்கை இருப்பு குறித்து அறிந்துகொள்ளும் அரசு இணையதளம்!

சென்னை (18 மே 2021): இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தை அடைந்து வரும் நிலையில் தமிழகத்திலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு எந்தெந்த மருத்துவமனைகளில் படுக்கை இருக்கைகள் உள்ளன ? என்பதை அறிந்து கொள்ளவும், படுக்கைகளை அந்தந்த பகுதிகளில் முன்பதிவு செய்து கொள்ளவும் வசதிக்காக இணையதளம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முகவரி  http://ucc.uhcitp.in/ இதில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளை பூர்த்தி செய்து படுக்கைகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும்...