ட்விட்டரிலிருந்து இந்திய ஊழியர்கள் நீக்கம் – எலான் மஸ்க் அதிரடி!

புதுடெல்லி (05 நவ 2022): ட்விட்டரில் இந்தியாவில் பணியாளர்களை குறைக்கும் விதமாக பணி நீக்க நடவடிக்கையை அந்நிறுவனம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை கடந்த வாரம் தன்வசப்படுத்திய எலான் மஸ்க், அதன் CEO பராக் அகர்வால், அதன் CFO மற்றும் வேறு சில உயர் அதிகாரிகளை நீக்கினார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் இன்று தனது ஊழியர்களுக்கு மெயில் ஒன்றை அனுப்பி இருந்தது. அதில், “ட்விட்டர் நிறுவனத்தை ஆரோக்கியமான பாதையில் வழிநடத்த, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணிநீக்கம்…

மேலும்...

ஒன்றிய அரசுக்கு எதிராக ட்விட்டர் நீதிமன்றத்தில் மனு!

புதுடெல்லி (06 ஜூலை 2022): கருத்துப் பதிவுகள் மற்றும் சிலரது பக்கங்களை நீக்கும் விவகாரம் தொடர்பாக  ஒன்றிய அரசுக்கு எதிராக ட்விட்டர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்திற்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக அந்த தளத்தின் செயல்பாடு, அதில் பதிவு செய்யப்படும் பதிவுகள் போன்ற காரணங்களால் முரண்பாடு நீடித்து வருகிறது. இந்நிலையில், பதிவுகளை நீக்கும் பொருட்டு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக, இந்த வழக்கை சில ஆதாரங்களுடன் ட்விட்டர் நிறுவனம்…

மேலும்...

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக்கிங்!

புதுடெல்லி (12 டிச 2021): சமூகவலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில், அரசியல் தலைவர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடியும் ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு இரண்டு ட்விட்டர் கணக்குகள் உள்ளன. ஒன்று, இந்திய பிரதமரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமாகும். அது @PMOIndia என்ற கணக்கு. மற்றொன்று பிரதமர் மோடியின் தனிப்பட்ட கணக்கான @narendramodi என்பது. இந் நிலையில்தான் நள்ளிரவில் சில நிமிடங்கள் @narendramodi கணக்கு ஹேக் செய்யப்பட்டது. ஹேக்கர்கள் சிலர் இந்த…

மேலும்...

ட்விட்டர் தலைமை நிர்வாகி திடீர் விலகல்!

நியூயார்க் (29 நவ 2021): ட்விட்டர் தலைமை நிர்வாகி ஜேக் டோர்சி தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) பதவி வகித்தவர் ஜேக் டோர்சி. 45 வயதான டோர்சி, அவரது டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனமான ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றுகிறார். இந்நிலையில், ட்விட்டர் தலைமை பொறுப்பில் இருந்து ஜேக் டோர்சி பதவி விலக உள்ளதாகவும், டோர்சி மற்றும் டுவிட்டர் நிர்வாகக்குழு அடுத்த சிஇஓ…

மேலும்...

ட்விட்டர் மீது ராகுல் காந்தி பாய்ச்சல் – யூடூபில் பரபரப்பு வீடியோ!

புதுடெல்லி (13 ஆக 2021): ட்விட்டர் தனது நடுநிலையை இழந்துவிட்டதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிறுமியின் பெற்றோருடன் ராகுல் காந்தி ட்விட்டரில் வீடியோ வெளியிட்டிருந்தார். இது டுவிட்டரின் விதிகளுக்கு முரணாகவும், குழந்தைகள் உரிமைகளுக்கு எதிராகவும், போக்சோ சட்டத்துக்கு எதிராகவும் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ராகுல் தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து அந்தப் புகைப்படத்தை நீக்கினார் .ஆனால் அதனையும் மீறி அவரின் டுவிட்டர் கணக்கை டுவிட்டர்…

மேலும்...

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு திடீர் நீக்கம்!

புதுடெல்லி (07 ஆக 2021): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஒன்பது வயது சிறுமியின் பெற்றோரின் படத்தை பகிர்ந்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் வாகனத்தில் சிறுமியின் பெற்றோர் உடனான உரையாடலில் பெற்றோரின் முகங்களை தெளிவாக வெளியிட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராகுல் சர்சைக்குரிய ட்விட்டை பகிர்ந்தற்காக, ராகுலுக்கு எதிராக டெல்லி காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்தது. ராகுல் காந்திக்கு…

மேலும்...

முஸ்லீம் வயோதிகர் தாக்கப்பட்டதை வெளியிட்ட ட்விட்டர், ஊடகவியலாளர் மீது வழக்கு பதிவு!

லக்னோ (16 ஜூன் 2021): காசியாபாத்தின் லோனியில் வயதான முஸ்லீம் நபர் தாக்கப்பட்ட சம்பவத்தை வெளியிட்ட ட்விட்டர், ஊடகவியலாளர்கள் மற்றும் இரண்டு காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக உத்தரபிரதேச அரசு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. உள்ளூர் போலீஸ்காரர் அளித்த புகாரின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் காசியாபாத்தில் உள்ள லோனி பார்டர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின்படி , வகுப்புவாத அமைதியின்மையைத் தூண்டும் நோக்கத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக உத்தரப் பிரதேச…

மேலும்...

இந்திய அரசின் வழிகாட்டு விதிமுறைகளை மதிக்காத ட்வி ட்டர்!

புதுடெல்லி (31 மே 2021): இந்திய அரசின் புதிய விதிகளை ஏற்பதில் ட்வி ட்டர் காலதாமதம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் போடும் வகையில் கடந்த 26ஆம் தேதி புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது மத்திய அரசு. குறிப்பாக , குறைதீர்க்கும் அலுவலர், கட்டுப்பாட்டு அலுவலர், தலைமை குறைதீர்க்கும் அலுவலர் ஆகியோரை நியமிக்க வேண்டும்; அவர்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்; அவர்களைப் பற்றிய முழு விபரங்களையும் தொடர்பு எண்களையும் தங்களின் சமூக ஊடக…

மேலும்...

இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பைப் பரப்பும் வாட்ஸ் அப் – அதிர வைக்கும் புள்ளி விவரம்!

வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படும் மூன்றில் ஒரு குறுஞ்செய்தி இஸ்லாம் மீதான பயத்தையும், வெறுப்பையும் விதைக்கும் விதமாக இருக்கின்றன என்று ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 2018-ல் இருந்து ஆகஸ்ட் 2019-வரை வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை Fear Speech, Normal என இருவகைகளாகப் பிரித்துள்ளனர். இதில் வாட்ஸ்அப் குழுக்களில் அனுப்பப்படும் மூன்றில் ஒரு குறுஞ்செய்தி இஸ்லாம் மீதான பயத்தையும், வெறுப்பையும் விதைக்கும் விதமாக இருப்பதாக அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்திருக்கிறது. மேலும், இந்த மாதிரியான Fear Speech வகை…

மேலும்...

இந்தியாவில் ட்விட்டருக்கு தடை வருமா?

புதுடெல்லி (08 பிப் 2021): இந்திய அரசின் கோரிக்கைக்கு ட்வீட்டர் சமூக வலைத்தளம் இதுவரை பதிலளிக்காததால் ட்வீட்டர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கூடும் என தெரிகிறது. விவசாயிகளின் போராட்டம் தொடர்பான 1,000 க்கும் மேற்பட்ட ட்வீட்களை நீக்குமாறு ட்விட்டரை மத்திய அரசாங்கம் கேட்டுள்ளது. நீக்கக் கோரப்பட்ட 1178 ட்விட்டர் கணக்குகள் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் கணக்குகள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகள் வேலைநிறுத்தம் குறித்து தவறான மற்றும் ஆத்திரமூட்டும் செய்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை…

மேலும்...