முதல்வர் ஷிண்டே நிகழ்ச்சியில் மாட்டு மூத்திரம் தெளித்த உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள்!

மும்பை (13 செப் 2022): மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்ற நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரேவின் ஆதரவாளர்கள் மாட்டு மூத்திரத்தை தெளித்தனர். அவுரங்காபாத்தில் உள்ள பிட்கின் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பானையில் கொண்டு வரப்பட்ட மாட்டு மூத்திரத்தை மேடையிலும், வழியிலும் த்தவ் தாக்கரேவின் ஆதரவாளர்கள் தெளித்து வரும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக ஷிண்டே தரப்பு இன்னும் பதிலளிக்கவில்லை. உத்தவ் தாக்கரே…

மேலும்...

மகாராஷ்டிராவில் சிவசேனா போராட்டம் நடத்த திட்டம்!

மும்பை (25 ஜூன் 2022): மகாராஷ்டிராவில் குழப்பமான அரசியல் சூழல் நிலவும் நிலையில் சிவசேனா கட்சியின் தொண்டர்கள் மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் பெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்த கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவுடன் அணி திரண்டுள்ளனர். இவர்கள் அனைவரும்…

மேலும்...

உத்தவ் தாக்கரே மனைவியை விமர்சித்ததற்காக பாஜக தலைவர் மீது வழக்குப் பதிவு!

புனே (07 ஜன 2022): மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மனைவி ரேஷ்மி தாக்கரேவை பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மனைவி ராஃப்ரி தேவியுடன் ஒப்பிட்டு விமர்சித்ததற்காக சமூக ஊடக பிரிவு பொறுப்பாளர் ஜிதின் கஜாரியா மீது புனே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பீகாரில் கால்நடை ஊழல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டபோது அவரது மனைவி ராஃப்ரி தேவி, முதல்வராக பதவியேற்றார். இந்த நிகழ்வை ஒப்பிட்ட…

மேலும்...

மூன்றாவது அணியை ஒருங்கிணைக்கும் மம்தா – காங்கிரஸ் மீது சாடல்!

புதுடெல்லி (02 டிச 2021): காங்கிரஸ் தவிர மூன்றாவது அணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி களமிறங்கியுள்ளார். மேற்கு வங்க இடைத்தேர்தலில் பவானிபூரில் அமோக வெற்றி பெற்ற பிறகு, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து பரந்த கூட்டணியை அமைப்பதுதான் மம்தா பானர்ஜியின் நடவடிக்கை. ஆனால் தற்போது UPA மாற்றுக் கூட்டணி என்ற நிலைப்பாட்டை மம்தா எடுத்துள்ளார். நேற்று முன் தினம் மகாராஷ்டிரா வந்தடைந்த மம்தா பானர்ஜி, இன்று சரத் பவாரை…

மேலும்...

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு ஆபத்து – என்ன சொல்கிறது சிவசேனா?

மும்பை (21 ஜூன் 2021): மஹாராஷ்ட்ராவில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சிவசேனா கட்சி கூட்டணி கட்சியான பாஜகவுடன் நட்பை முறித்துக்கொண்டு, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு இணைந்து ஆட்சி அமைத்தது. இந்தநிலையில் சமீபத்தில் சிவசேனா கட்சி தலைவரும், மஹாராஷ்ட்ரா முதல்வருமான உத்தவ் தாக்ரே பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார், ஆனால் சிவசேனா பாஜகவுடன் மீண்டும் கைகோர்த்து ஆட்சியமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும்,…

மேலும்...

பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்!

மும்பை (26 அக் 2020): துணிவிருந்தால் எங்கள் அரசை கவிழ்த்துப் பாருங்கள் என்று பாஜகவுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சவால் விட்டுள்ளார். சிவசேனா கட்சியின் சார்பில் தசரா பேரணி மும்பை தாதர் பகுதியில் சிறிய அரங்கில் நேற்று நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக மிகப்பெரிய அளவில் சிவாஜி பார்க்கில் திறந்த வெளியில் நடத்தப்படாமல் சிறிய அளவிலேயே நடத்தப்பட்டது. இந்த தசரா பேரணியில் சிவசேனா தலைவரும், மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:…

மேலும்...