ஒன்றிய பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு அதிகரிப்பு!

புதுடெல்லி (01 பிப் 2023): 2023-2024 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புதிய வரி முறையில் வருடத்திற்கு ரூ. 7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது. ஏற்கனவே ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது என இருந்த நிலையில், தற்போதைய பட்ஜெட்டில் அது ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய வரி…

மேலும்...

மத்திய பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி (01 பிப் 2022): ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் -ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. -இளைஞர்கள், பெண்கள் ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும். -சுயசார்பு திட்டத்தின் கீழ் தொழில்துறையை ஊக்குவிக்கும் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. -சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. -4-00 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். -போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்பு…

மேலும்...

பிப்ரவரி 1 ஆம் தேதி ஒன்றிய அரசின் பட்ஜெட்!

புதுடெல்லி (22 நவ 2021): பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தேதியை மாற்ற வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த வரவு செலவுத் திட்டத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இம்முறை அதிக கால அவகாசம் வழங்கப்படும். திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை, கூடுதல் நேரம் கிடைக்க நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். கோவிட் சூழ்நிலையில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு செலவு செய்வதில் சில பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன….

மேலும்...

வெளிநாட்டில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விதிப்பு உண்டா? நிர்மலா சீதாராமன் விளக்கம்!

புதுடெல்லி (02 பிப் 2020): “வெளிநாட்டில் வருமானம் ஈட்டி, அதன் மூலம் இந்தியாவில் சொத்துக்கள் வாங்கியிருந்தால் வரி விதிக்கப்படும்!” என்று புதிய விளக்கத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், “வெளிநாடுகளில் பணியாற்றுபவர்களின் வருமானம் மற்றும் சொந்தமாக தொழில் நடத்தி அங்கேயே வாழும் இந்தியர்களின் வருமானம் மீதான வரிவிதிப்பு தொடர்பாக தெளிவான விளக்கம் இடம்பெறவில்லை!” என்ற சர்ச்சை எழுந்தது. சர்வதேச ஊடகங்களும், இந்தியாவின் முக்கிய ஊடகங்களும் “வெளிநாட்டு…

மேலும்...

ஒன்றும் புரியவில்லை – பட்ஜெட் குறித்து மன்மோகன் சிங் கருத்து!

புதுடெல்லி (02 பிப் 2020): நீண்ட நேரம் பட்ஜெட் வாசித்ததால் ஒன்றும் புரியவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மல சீதாராமனால் சமர்ப்பிக்கப் பட்டது. இந்நிலையில் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்மோகன் சிங், மிக நீண்ட பட்ஜெட். அதனால் என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள வெக நேரம் தேவைப்படுகிறது என்றார். இதுதவிர காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மத்திய பட்ஜெட் வெற்று…

மேலும்...

இந்திய பட்ஜெட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வரி – அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி (02 பிப் 2020): வெளிநாடு வாழ் இந்தியர்களும் வரி செலுத்தும் வகையில் இந்திய பட்ஜெட்டில் வரி விதிப்பு முறை மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. 2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது தனிநபர் வருமான வரியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதுகுறித்து நிருபர்களிடம் தெரிவித்த வருவாய்த் துறைச் செயலாளர் அஜய் பூஷன் பாண்டே., “வெளிநாடு வாழ் இந்தியர்களும் வரி செலுத்தும் வகையில் வரி செலுத்தும் முறையில்…

மேலும்...

மத்திய பட்ஜெட் திருப்தியில்லை – ஸ்டாலின் அறிக்கை!

மத்திய அரசின் பட்ஜெட்டில் திருப்தியில்லை என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: மத்திய பா.ஜ.க அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை ”பொருளாதார தேக்க நிலைமை”, “கிராமப்புறப் பொருளாதார வீழ்ச்சி”, “கிராமப்புற மக்களின் வருவாய்”, “வேலைவாய்ப்பின்மை” உள்ளிட்ட மிக முக்கியப் பிரச்சினைகள் குறித்துக் கிஞ்சித்தும் கவலை இல்லாமல், பா.ஜ.க விரும்பும் கலாச்சாரத் திணிப்பைச் செய்யும் ஒரு நிதிநிலை அறிக்கையாக இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது….

மேலும்...

மத்திய பட்ஜெட்டுக்கு முதல்வர் எடப்பாடியின் கருத்து!

சென்னை (01 பிப் 2020): மத்திய அரசின் பட்ஜெட் எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள 2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்காக மத்திய நிதியமைச்சரை நான் பாராட்டுகிறேன். இந்த நிதி நிலை அறிக்கை உள்கட்டமைப்பு, விவசாயம், பாசன வசதி மற்றும்…

மேலும்...

நீங்கள் ஹல்வா என்றால் நான் மிளகா – நிர்மலா சீதாராமனின் ஹல்வா விழாவை கிண்டல் செய்த உவைசி

புதுடெல்லி (23 ஜன 2020): மத்திய நிதியமைச்சகம் கொண்டாடிய ஹல்வா விழாவை அசாதுத்தீன் உவைசி கிண்டலடித்துள்ளர். மத்திய நிதி அமைச்சகம் ஹல்வா விழாவை அதன் தலைமையகத்தில் கொண்டாடியது. இந்த விழாவிற்கு மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்நிலையில் இந்த விழா குறித்து கறீம் நகரில் பேசிய உவைசி, “ஹல்வா என்பது இந்தியாவின் எந்த மொழியிலும் உள்ள வார்த்தை கிடையாது….

மேலும்...

நிர்மலா சீதாராமனின் அமைச்சர் பதவி பறிப்பு?

புதுடெல்லி (20 ஜன 2020): மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாகவும், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யபடலாம். அப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அந்த பதவியிலிருந்து அவர் மாற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய அமைச்சராக பொறுப்பேற்று யார் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த மத்திய அமைச்சரவை…

மேலும்...