சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தும் விதமாக உரிய சட்டம் கொண்டு வருவதற்கு சட்டசபையை கூட்ட வேண்டும் என்று கவர்னரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நியமித்த வாரியங்களால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை. எனவே, அதனை தொடர்ந்து இயங்க அனுமதிப்பதைவிட கலைப்பதே மேல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று வரவேற்றார்.

சென்னை: ஃபேஸ்புக்கில் சிறுமிகள் பற்றிய ஆபாச தகவல்களை வெளியிட்ட மணிகண்ட பிரபு என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை: திமுக ஆட்சியில்தான் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்னை வரவுள்ள பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: மதுவிலக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொள்ளும் மாற்றுத் திறனாளிகளை மாற்று போராட்டம் மேற்கொள்ளுமாறு எஸ்.டி.பி.ஐ.மாநிலத் தலைவர் தெஹல்கான் பாகவி கோரிக்கை வைத்துள்ளார்.

காரைக்கால்: நாகை மாவட்டம் தரங்கம்பாடியிலிருந்து காரைக்காலுக்கு மணல் கொள்ளை நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தவேண்டும் என கூடுதல் ஆட்சியரிடம் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜய்காந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர்: ஓசூர் விஷ்வ இந்து பரிஷத் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதில் கோஷ்டி மோதல் காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...