காரைக்கால்: காரைக்கால் 2035 வளர்ச்சித்திட்டங்களை கடந்த 15 நாட்களாக ஆய்வு செய்த விஜயவாடா கல்லூரி மாணவர்களின் கள தகவல் சேகரிப்பு பணி நிறைவு பெற்றது.

கரூர்: கரூரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டை மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி வெளியிட்டார்.

காரைக்கால்: காரைக்காலில் கடந்த பல நாட்களாக நிறுத்திவிட்டு செல்லும் பைக்கை திருடி வந்த இருவரை, அம்பகரத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச்சு இந்தி தெரியாத மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

கோவை: தேமுதிக தலைவர் விஜய்காந்த் காவல்துறை அதிகாரியாக நடித்த படங்களை பார்த்து அவரை காவல்துறை அதிகாரிகள் பின்பற்றுகிறார்கள் என்று விஜய்காந்தின் மனைவியும்,தே.மு.தி.க. மகளிர் அணி தலைவியுமான பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னை: இடஒதுக்கீடு விவகாரத்தில் மோடி அரசின் சமூகநீதி எப்படிப்பட்ட சமூக அநீதியை நோக்கிச் செல்லுகிறது என்று? என்று தி.க.தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

காரைக்கால்: காரைக்காலுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கக்கோரி, காரைக்காலில் நெடுங்காடு தன்னம்பிக்கை தங்கரா மக்கள் சேவை இயக்கமும், பாபு பேரவையும் இணைந்து நேற்று முன்தினம் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

சென்னை: பா.ம.கவிலிருந்து விலகி 60க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர்.

சென்னை: கிரானைட் அதிபர்களை காப்பாற்ற அரசு முயற்சி செய்து வருகிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காரைக்கால்:   காரைக்கால் போக்குவரத்து காவல் நிலையத்தில், விபத்துக்குள்ளான இரு சக்கர வாகனத்தை ஜாமினில் விட, ரூ.4,200 லஞ்சம் கேட்டதற்காக, துணை உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, காரைக்கால் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...