கரூர் : என்.புதுப்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் மரத்தில் வாலிபர் ஒருவரின் பிணம் தூக்கிட்ட நிலையில் தொங்கவிடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் : கரூரில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் ஒரு பெண் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கரூர் : 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவி மதிப்பெண் பட்டியலைத் திருத்தி, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் படித்த விவகாரத்தில் முன்னாள் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கல்விதுறைக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

மதுரை : "நடிகர் சங்கத் தேர்தலின் பின்னணியிலுள்ள அரசியல் சதி குறித்து பயமேதுமில்லை; அதையும் கடந்து நாங்களே தேர்தலில் வெற்றிபெறுவோம்" என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

கரூர் : வரும் செப்டம்பரில் திருப்பூரில் நடைபெறும் ம.திமு.க மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுச் செயலாளர் வை.கோ வின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என கரூர் ம.தி.மு.க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சி : கழிவறையில் 6 ஆம் வகுப்பு மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தமிழாசிரியரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

சென்னை: ரம்ஜான் நோன்பை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்க தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் : முன்னரே திருமணமானவர் என்பது அறியாமல் ஃபேஸ்புக் மூலம் நண்பரானவரைத் திருமணம் செய்த இளம்பெண், தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்து நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை : தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கரூர் : குடிசை வீட்டில் தீ படர்ந்ததைத் தொடர்ந்து வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் சேதமடைந்தன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...