சென்னை(11 அக். 15): உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் மகன் மு.க.முத்து பொருளாதார உதவிக்கு ஆதரவின்றி தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை(10 அக். 15): ஹஜ் புனித யாத்திரைக்குத் தமிழகத்திலிருந்து சவூதி சென்ற யாத்திரிகர்களைக் கொண்டு முதல் விமானம் சென்னை திரும்பியது.

சேலம்(10 அக். 15): சேலத்தில் நடை பெற்ற டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் "முழுக்கை சட்டை போட்டால் டெங்குவில் இருந்து தப்பிக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை:(10 அக். 15)பாம்பு கடித்து உயிரிழந்த குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிதி உதவி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

சென்னை (10 அக். 15): கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜின் மூன்று நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை(10 அக். 15): பெரியாரைக் கொச்சைப்படுத்திய கோணல் புத்தியாளர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் பூணுல் அறுப்புக்கு மட்டும் நடவடிக்கை ஏன்? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை(10 அக். 15): கணவனின் குடிபழக்கத்தால் மனம் வெறுத்து மனைவியும் இரு பிள்ளைகளும் தற்கொலைக்கு முயன்றதில் பிள்ளைகள் இருவரும் பலியான சம்பவம் சென்னை கீழ்பாக்கம் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை(10 அக். 15): நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 19 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

சென்னை(10 அக். 15): சென்னை திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை  வழக்கை சிபிசிஐடி விசாரணையில் இருந்து மாற்ற முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை(10 அக். 15): "பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை 2 மாதங்களில் மாற்றி அமைக்க வேண்டும்" என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...