கரூர்(13 அக். 15): கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்த, கோகுல்ராஜ் கொலை வழக்கின் இரண்டாம் குற்றவாளி அருணை திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு மாற்றம் செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கும் அதனை விசாரித்துக்கொண்டிருந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கும் தமிழகத்தில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வழக்கு விசாரணை காவல்துறையினர் நடத்தக்கூடாது எனவும் சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் எழுப்பப்பட்ட கோரிக்கையினைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினருக்கு இவ்வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

இதற்கிடையில், இக்கொலை வழக்கின் முதல் குற்றவாளி யுவராஜ் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சரணடைந்தார். இந்நிலையில் இவ்வழக்கின் இரண்டாம் குற்றவாளி அருண் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற எண் 1 ன்  நீதிபதி பத்மநாபன் குற்றம் சாட்டப்பட்டுள்ள சங்ககிரியை சார்ந்த அருணை திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார். இவரை நாமக்கல் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

- சி.ஆனந்தகுமார்

கரூர்(13 அக். 15): பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபர் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

திண்டுக்கல் (13 அக். 15): எங்கள் கிராமத்திற்கு யாரும் ஓட்டு கேட்டு வரக்கூடாது என்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் உள்ள சாமியார் முப்பனூர் என்ற கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

சேலம்(13 அக். 15): கோகுல் ராஜ் கொலை குற்றவாளி யுவராஜுக்கு உதவும் விதமாக வாட்ஸ் அப் மூலம் தகவல் வெளியிட்ட யுவராஜின் நண்பர் அமுதரசு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை(13 அக். 15): சென்னை மாநிலக் கல்லூரி தேர்தல் விவகாரத்தில் சுமூக தீர்வு காண வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி:  திருநெல்வேலி டவுன் சாலியர் தெருவில் இருசக்கர வாகனத்தில் வந்த கட்டிட தொழிலாளர்கள்  2 பேர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.  இச்சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி(13 அக். 15): தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் சந்திப்பு நடத்திய சுயேச்சை எம்.எல்.ஏ சிவக்குமார், புதுவை அரசுக்கு ஆதரவு தொடரும் என தெரிவித்துள்ளார்.

ஈரோடு(13 அக். 15): தகாத உறவு வைத்திருந்த மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து மனைவியைத் தற்கொலை செய்ய தூண்டிய தனியார் பேருந்து நடத்துநருக்கும் அப்பெண்ணுக்கும் மகளிர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

விழுப்புரம்(13 அக். 15): "மோடி சொல்லும் மேக் இன் இந்தியா தோல்வியடைந்த திட்டம். அது மேக் இன் இந்தியா அல்ல; ப்ரேக் இன் இந்தியா" என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் மோடியை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

கரூர்: குடிகாரர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்துரையாடல் போது திமுக பொருளாளர் ஸ்டாலினிடம்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...