கோவை: கோவை மத்திய சிறைச்சாலைக்குள் நேற்று மாலை தடைப்பட்ட பொருட்களை வினியோகம் செய்தபோது சிறைக்காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆயுள் தண்டனை கைதி கருப்பசாமி என்பவர் உயிரிழந்தார்.

விழுப்புரம் : விழுப்புரத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து கல்வி உரிமைகளுக்கான கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் : சிறுபான்மை மொழி மாணவர்கள் தங்களின் தாய்மொழியை தவிர தமிழும் கட்டாயம் கற்கவேண்டும் என சட்ட திருத்தம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி : புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டிற்கான சென்டாக் பொது-பிரிவினருக்கான கலந்தாய்வு  இன்று  தொடங்கியது.

சென்னை : புனித ரமலான் மாதத்தில் நோன்பு வைக்கும் ஏழை எளியோருக்கு வைகோ உணவுப் பொருட்க்ள் (ஸதக) வழங்கினார்.

சென்னை : "ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் தமிழகத்தில் முடக்கப்பட்டுள்ளது" என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு எதிராக குற்றஞ்சாட்டி உள்ளார்.

கோவை : மத்திய சிறையில் ஆயுள்தண்டனை கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து 2000 க்கும் மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி: சன் நெட்வொர்கின் 33 சேனல்கள் ஒளிபரப்பு விரைவில் நிறுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை :  காற்றாலையிடமிருந்து மின்சாரம் வாங்க தமிழக அரசு தயங்குவது ஏன்?" என நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை : "ஆளும்கட்சியின் அமைச்சர்களும் சட்டசபை உறுப்பினர்களும் தொண்டர்களும் கண்ணியமாக பார்க்கப்படுவதில்லை. மாறாக துதிபாடிகளாகவும் அடிமைகளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்" என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...