திருப்பதி: ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரின் உடல்கள் அவரவர்களின் ஊர்களுக்கு அனுப்பி வைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளன.

நெய்வேலி: ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் வெட்டி கடத்தியதாகக் கூறி தமிழர்கள் 12 பேர் உட்பட 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெய்வேலியில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

கோவை: "தாலி அகற்றும் போராட்டத்தை திராவிட கழகம் கை விடவில்லை என்றால், பெரியார் சிலையை அவமதிப்பு செய்யும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று இந்து முன்னணி தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை: திமுக பொதுச் செயலாளரும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல்: நாமக்கல் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி: நடிகர் விஜய் மன்றத் தலைவரும் திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளருமான பில்லா ஜெகன் வீட்டில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

சென்னை: "ரெயிலில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக" தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கலிங்கப்பட்டி: மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ "தனது தந்தையாரின் நினைவு தினமான இன்று யாரிடமும் பேசாமலும், தண்ணீர் பருகாமலும் மௌன விரதம்" இருந்து வருகிறார்.

சென்னை: திண்டுக்கல் அருகே "சாலை விபத்தில் சிக்கி மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 15 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயும் நிவாரண நிதியாக வழங்க வேண்டும்" என்று தமிழக அரசுக்கு இந்திய தவ்ஹித் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை: "தமிழக முதல்வரை சந்திக்க சென்ற விவசாயிகளுக்கு தடை விதித்தது நியாயமான செயல் இல்லை" என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...