காரைக்கால்: இலங்கை செல்லும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி, தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்க, இலங்கை அரசை வலியுறுத்தவேண்டும் என எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாஹ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: கல்லூரி மாணவி கொலையில் திடீர் திருப்பமாக மாணவியின் காதலனே கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுடெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான விசாரணையில் ஜெயலலிதா பதிலளிக்க கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: இடைத்தேர்தலில் அதிமுக பணம் கொடுத்ததற்கு தேர்தல் ஆணையத்திற்கு ஒருவர் ஆதாரத்துடன் எழுதியுள்ள கடிதம் நல்ல சான்று என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

வரவிருக்கின்ற தமிழக பட்ஜெட்டில் விவசாயத்திற்கும் அடுத்த படியான ஜவுளித்தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சென்னை: வேளாண் பொறியாளர் முத்துகுமாரசாமி தற்கொலை செய்துகொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை: பிரபல தொலைக்காட்சியான புதிய தலைமுறை தொலைக்காட்டசி கேமரா மேன் மற்றும் பெண் செய்தியாளர் மீது திடீர் வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்திற்கு 1000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் இவாண்டின் இறுதிக்குள் கொள்முதல் செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரி வித்துள்ளார்.

தமிழகத்தில் சில கட்சிகளுக்குள் கோஷ்டி பூசல், குடிமிப்புடி சண்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருந்தாலும் அ.தி.மு.க கட்சியை பொறுத்தவரை அம்மா என்றால் எல்லா நிர்வாகிகளும் சைலண்ட் தான்.

தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் வரும் மே 1ஆம் தேதி முதல் புதிய நாளிதழ் துவங்க இருப்பதாக இமயம் ஜெபராஜ் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...