கரூர்: கரூரில் நடைபெற்ற தமிழுணர்வாளர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

சென்னை: கல்வி நிறுவனம் குறித்த விளம்பரத்தில் மட்டுமே நான் நடித்துள்ளேன் கல்வி நிறுவனத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி பாதுகாப்பிற்காக துணை ராணுவப்படை சென்னை வரவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

சென்னை: தொண்டர்களின் எழுச்சியே என் தளர்ச்சியை நீக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை: அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பள்ளியை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அடையாறு காந்திநகரில் பாலவித்யா மந்திர் என்கிற தனியார் பள்ளி ஒன்று உள்ளது. சி.பி.எஸ்.சி பாடதிட்டத்தின் கீழ் இயங்கும் இந்த பள்ளியில்,  அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பது மட்டுமின்றி, நன்கொடை என்கிற பெயரில் 8 முதல் 10 லட்சம் வரை வசூலிப்பதாக பெற்றோர்கள் தரப்பில் பரபரப்பான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த தொகையை கட்ட இயலாத மாணவர்களை பள்ளியைவிட்டு நீக்குவது மட்டுமின்றி, பள்ளியில் கூடுதல் கட்டணம் கட்டும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும், நிர்ணயத்துள்ள தொகையை மட்டுமே கட்டும் மாணவர்களை தரையில் அமர வைத்து கார்ப்பரேஷன் பள்ளி மாணவர்களை போலவும் பாரபட்சமாக நடத்துவதாகவும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த பள்ளியின் முதல்வர் முதல் அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர்களுக்கு ஆதரவாக, பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை: ஐ.ஐ.டி எனப்படும் இந்திய தொழில் நுட்பக்கழகத்தின் சென்னை கிளையில் அம்பேத்கர் - பெரியார் மாணவர் அமைப்பிற்குத் தடை விதிக்கப்பட்டதை கண்டித்து,  திமுக மாணவர் அணியினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை அடையாறில் இயங்கி வரும் ஐ.ஐ.டி.யில் பிரதமர் மற்றும்  மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்ததாக அம்பேத்கர் - பெரியார் வாசக வட்டம் என்ற மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவர் அணியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அதே◌ான்று,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மத்திய கைலாஷ் பகுதியில் சென்னை ஐ.ஐ.டிக்கு எதிராக ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். மேலும் மாணவர்களின் கருத்துரிமையைப்  பறிக்கும் வகையில் நடைபெற்று இருக்கும் இந்த செயலுக்குக்  கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ஐ.ஐ.டி. நிர்வாகம் இந்தத்  தடையை நீக்க வேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இன்று பெங்களூருவில்  நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்பில் கணக்கு பிழை இருப்பதாக கூறி, தீர்ப்பை எதிர்த்து  திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

ஆனால்,, மேல்முறையீடு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக  அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார்,  கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு அண்மையில் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார். இதனையடுத்து முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

கர்நாடக அரசின் இந்த முடிவு ஜெயலலிதா மற்றும் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் ஜெயலலிதா முதலமைச்சர் ஆனதை தொடர்ந்து அவர் போட்டியிட உள்ள ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் கர்நாடக அரசின் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அரசின் மேல்முறையீட்டு முடிவு, ஜெயலலிதாவுக்கு எதிரான பிரசாரத்திற்கு கிடைத்த  வாய்ப்பு என்ற எண்ணத்தில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற தங்களது முடிவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாற்றிக்கொண்டு, போட்டியிடுவதாக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.

காரைக்கால்: காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் தானியப்பயிர்களான சோளம், கேழ்வரகு சாகுபடியை நிலைய தலைவர் சுரேஷ் துவங்கி வைத்தார்.

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியின்றி போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று த.மா.கா. துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

சென்னை: "ஒரு கட்சியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இருந்தாலும் அவருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்க வேண்டும்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...