புதுடெல்லி: காஷ்மீரில் எதிரிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் பழைய மின்சார மீட்டர்களுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாற்றபடும் "டிஜிட்டல் மீட்டர்களுக்கு யாரும் கட்டணம் செலுத்த தேவையில்லை" என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை: "ஆடிட்டர் குருமூர்த்தி விடுத்துள்ள சவாலை ஏற்க தயார் என்றும், என் மீது சுமத்திய குற்றச்சாட்டை நிரூபித்து விட்டால் அரசியலை விட்டே விலகுவேன்" என்றும் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னை மதுரவயல் பகுதியில் அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி பரிதாபமாக பலியானார்.

சென்னை: லிங்கா தோல்வி குறித்து ஆய்வு செய்ய நடிகர் ரஜினி பிரதிநிதி ஒருவரை நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திருச்சி: சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமியின் அதிரடி நடவடிக்கையினால், திருச்சி மாநகர காவல்துறை ஆணையரை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது.

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே சட்டவிரோதமாக வெடிகுண்டுகள் தயாரித்த மதியழகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை: இந்தி திணிப்பு விவகரத்தில் முன்னாள் பிரதமர்களின் வாக்குறுதியை மோடி காப்பாற்றுவாரா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: "புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோர் கடவுச்சீட்டு பெறுவதற்கான சிறப்பு முகாம்" சென்னை மஸ்ஜிதே முனவ்வர் மசூதியில் வைத்து நடைபெற உள்ளது.

திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் பாஜக வேட்பாளராக பாஜக மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணியம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...