நிவர் புயலால் 10 லட்சம் பேர் பாதிப்பு!

சென்னை (27 நவ 2020): நிவர் புயலால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், புதுவை பகுதிகளில் வீடுகளில் புகுந்த வெள்ளம், மின்சார துண்டிப்பால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வங்ககடலில் கடந்த 16ம் தேதி உருவான காற்றழுத்தம் தீவிரமடைந்து நிவர் புயலாகவும் அதி தீவிர புயலாகவும் மாறியது. இது நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணி முதல் நேற்று அதிகாலை 2.30 மணி வரை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கரையை கடந்தது.

இந்தப் புயல் திருவண்ணாமலை, வேலூர் பகுதி வழியாக தெற்கு ஆந்திரா பகுதிக்குச் சென்றது. இதனால், புதுவை மற்றும் விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, திருண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை கொட்டியதால் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கின.

ஹாட் நியூஸ்: