பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைப்பு – புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு!

சென்னை (19 மே 2020): தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 4-வது முறையாக மே 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 12-ந்தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தேர்வு தேதியை தள்ளி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  உதய்ப்பூர் வன்செயல் - திருமாவளவன் கண்டனம்!

அதன்படி ஜூன் 15-ந்தேதி முதல் ஜூன் 25-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காலையில் நடைபெறும். பொதுத்தேர்வின் போது ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவர்.

மேலும் 11-ம் வகுப்புக்கான விடுபட்ட தேர்வு ஜூன் 16-ந்தேதி நடைபெறும். 12-ம் வகுப்புக்கான எஞ்சிய தேர்வு ஜூன் 18-ந்தேதி நடத்தப்படும்.

புதிய தேர்வு அட்டவணை:-

ஜூன் 15-ந்தேதி : மொழிப்பாடம்
ஜூன் 17-ந்தேதி : ஆங்கில பாடம்
ஜூன் 19-ந்தேதி : கணிதம்
ஜூன் 20-ந்தேதி : விருப்ப மொழி
ஜூன் 22-ந்தேதி : அறிவியல்
ஜூன் 24-ந்தேதி : சமூக அறிவியல்
ஜூன் 25-ந்தேதி : தொழிற்பாடம்