காங்கிரஸின் திட்டத்தில் மோடி கையெழுத்து - குஷ்பு தாக்கு!

ஜனவரி 27, 2015 949

சென்னை: காங்கிரஸ் கொண்டுவந்த திட்டத்தில் மோடி கையெழுத்து மட்டும்தான் போட்டுள்ளார் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகை குஷ்பு, "பெண்கள் தங்களது குடும்ப செலவுக்காக 100 நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்து வந்தனர். இந்த திட்டத்துக்கும் மோடி அரசு வேட்டு வைக்க பார்க்கிறது. இதனை ரத்து செய்து ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை கெடுக்க பார்க்கிறது.

பா.ஜனதா ஆட்சியில் மக்கள் யாருக்கும் நிம்மதி இல்லை. தமிழகத்தில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் இதே நிலைதான். ஜாதி, மத கலவரம் எங்கு எப்போது நடக்கும் என்ற பயமும் பீதியும் நிலவுகிறது.

இந்த அரசு ஆட்சி செய்த 7 மாதத்தில் என்ன சாதித்தார்கள்? காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களைத்தான் மோடி அரசு செயல்படுத்துகிறது.அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் மோடி அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது புதியது அல்ல. 10 ஆண்டுக்கு முன்பே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கையெழுத்து மட்டும்தான் இப்போது மோடி போட்டு இருக்கிறார்" என்றார்

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...