பா.ஜ.க.நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக ஒருவர் கைது!

ஜூலை 08, 2017 29478

செங்கல்பட்டு(08 ஜூலை 2017): செங்கல்பட்டு பாஜக நிர்வாகி சீனிவாசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக கோபி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த அனுமந்தபுத்தூர் பகுதியைச் சேர்ந்த, செங்கல்பட்டு பாஜக நகர துணை தலைவர் சீனிவாசனின் வீட்டில், கடந்த 6ஆம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் இருவர், பெட்ரோல் குண்டை வீசினர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சீனிவாசனின் எதிர்வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமாராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, மாமண்டூரைச் சேர்ந்த கோபி என்பவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜகவினர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவும் பிற சமூகத்தினரின் மீது பழி போடுவதற்காகவும் அவர்களாகவே அவர்கள் வீடுகளுக்கு பெட்ரோல் குண்டு வீசியது காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...