மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திடீர் தீ விபத்து!

பிப்ரவரி 03, 2018 541

மதுரை(03 பிப் 2018): மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின.

இரவு 10:45 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கு பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி வாகனங்கள் மூலம் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து, தீயணைப்பு லாரிகள் நிரப்பிய வண்ணம் இருந்தனர். தீ மளமளவென பரவியதால் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னரே தீயை அணைக்க முடிந்தது.

தீக்கான காரணம் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. இருப்பினும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மதுரை மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர் ஆகியோர் விரைந்து தீயணைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...