ராம சுப்பிரமணியன் பாஜகவிலிருந்து அதிரடி நீக்கம்!

February 21, 2018

சென்னை(21 பிப் 2018): பாஜகவின் ராம சுப்பிரமணியன் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் விடுத்துள்ள அறிக்கையில், " காஞ்சிபுரம் ராமசுப்பிரமணியன் கட்சிக்கும், கட்சி தலைவர்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களிலும் நேரடியாகவும் விமர்சித்து வருவதால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார்." என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ராமசுப்பிரமணியன் ஊடகங்களில் பாஜகவுக்கு ஆதரவாக விவாதங்களில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Tamilisai soundirarajan announced, Bjp Ramasubramaniyan dismissed from party 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!